Posts

Showing posts from April, 2017

குழந்தையின்மை – குற்றம் 23

Image
காலங்காலமாக பெண்களுக்கு உள்ள பல தலையாய பிரச்சினைகளில் குழந்தையின்மையும்  ஒன்று. எத்தனை நவீனமாக உலகம் மாறினாலும் சில பிரச்சினைகள் மட்டும்  நவீனத்துவத்துக்கு ஏற்ப மாறி வருகிறதே தவிர அதற்கு தீர்வு என்ற ஒன்று அமைவதே இல்லை எனலாம். உடலளவில் குழந்தை பெறுவதற்கு கணவன், மனைவி இருவரில் யாருக்கு பிரச்சினை இருந்தாலும் மனைவியை மட்டும் குற்றவாளியாக்குவதும், கொடுஞ்ச்சொற்களை வீசுவதும், உற்றார் உறவினர் “ஒரு குழந்தை பெத்துக்க கூட லாயக்கில்லை என்ற” கொடும் பார்வையால் சுட்டெரிப்பதும், இதையெல்லாம் மீறி ஒரு ஆணுக்கு எத்தனை பெரிய குறைகள் இருந்தாலும் மருத்துவம் என்பது பெண்ணையே சார்ந்துள்ளது. அந்த பெண்ணுக்கே அனைத்து விதமான வலிகளையும் உடலளவிலும் மனதளவிலும் தருகிறது. இது போன்ற சமுதாயத்தின் தண்டனைகளால் தன்னை ஒரு குழந்தைக்கு தாய் தந்தையராக்க அந்த தம்பதியினர் எவ்வித மருத்துவமும் செய்துக் கொள்ள தயாராகின்றனர். மனிதர்களின் பலவீனத்தை அறிந்தே பலவித வியாபாரங்கள் அவர்களை ஆட்டுவிக்கின்றது என்றாலும் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டிய மருத்துவர்களும் மருத்துவமும் வியாபாரம் ஆகி பல காலங்காளாகி போனது வேதனைக்குரிய விசய