Posts

Showing posts with the label பெண்கள்

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்

Image
இக்காலங்களில் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துக் கொண்டே வந்தாலும், ஆங்காங்கே வருடந்தோறும் நடக்கும் புத்தக கண்காட்சி புத்தக புழுக்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையாது. அதே போல் இந்த வருடமும் அமீரகத்தில், 37- வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. கடந்த வெள்ளி அன்று சென்று வர வாய்ப்புக் கிடைத்தாலும், செல்ல வேண்டும் என்ற நோக்கம் கடந்த வருடத்தில் கண்ட ஏமாற்றத்தை நிரப்ப இந்த வருடம் தமிழுக்கென்று பிரத்யோக தமிழ் கடைகள் அமைக்கவிருப்பதை அறிந்த பின் ஆர்வம் இரட்டிப்பாகானது. புத்தகம் என்றாலே தூக்க மருந்து என்றாகி போனாலும், நம் மொழிக்கான அங்கீகாரம் நம் வசிக்கும் அயல் நாட்டில் கிடைக்கிறது என்றால் சுண்டி இழுக்கத்தானே செய்யும். Hall No:7, ZB4 -ல் பபாசி மூலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள தமிழுக்கான கடையை நோக்கி விரைந்ததும் அகண்ட கண்கள் சுருங்கவில்லை, எத்தனை எத்தனை புத்தங்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்களின் படைப்புகள், வித்தியாசமான தலைப்புகளில் பல புத்தகங்கள் இருந்தாலும் நமக்கு அறியப்பட்ட சில எ...

செத்தால் எரித்து விடுங்கள்!!!

Image
பெண்ணாக பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரணங்கள் எண்ணற்றவை. இயற்கையாகவே உடலாலும் மனதாலும் பலவீனமானவள் பெண். அதனால் தான் “பெண்ணைக் கண்டால் பேயும் இறங்கும்” என்ற பழமொழியை ஒரு பெண்ணை நோக்கி கூறுகிறார்களோ என்னவோ. இயற்கையாக ஒரு பெண் தன் உடலில் அனுபவிக்கும் வலிகளும் வேதனைகளும் தடுக்க இயலாது எனினினும், மற்றவர்களால் அவள் படும் இன்னல்களை தடுக்க முடியும். அவளுடைய முயற்சி அதில் சிறிதளவு உள்ளது எனினும் பெரு முயற்சியும் பொறுப்பும் அவளை சுற்றி வாழும் மனிதர்கள் கையிலேயே உள்ளது என்றால் மிகையாகாது. ஆம்.. நம்மால் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு கேடும் வந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் ஒவ்வொருவரின் வாழ்வும் சுகமே. அதுவும் பெண்களை ஒரு ஆணுக்கு தேவைப்படும் சுகப்பொருளாக எண்ணுவதை விட்டு இரத்தமும் சதையும் கொண்ட அவளையும் ஒரு உயிராக ஒவ்வொரு ஆணும் என்று கருதுகிறானோ அன்றே இவ்வுலகை பூவுலகம் எனலாம். ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிற்கு ஏற்ப்படும் வலிகளையும் வேதனைகளையும் நான் உணரும் போது அந்த இடத்தில் என்னை வைத்து சித்தரித்தே பல இடங்களில் அழுது, தேம்பி இருக்கின்றேன். அதுவும் அவ...