~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு.... நம்முடைய ஒவ்வொரு செயலும் எண்ணப்படியே அமைகின்றன. அது உடனடியாக இருக்கலாம் இல்லையெனில் சற்று காலங்கள் கழித்தும் நடக்கலாம். இதனால் நாம் என்னும் எண்ணங்கள் நல் வழியில் அமைத்துக் கொண்டால் அதன் பலனும் நன்மையாகவே அமையும், இதனால் தீமையை விட்டு விலகி நிற்போம். ஒரு வேளை நாம் எண்ணும் அந்த செயல் நடக்காமல் போய் விட்டால், அதை நினைத்து வருந்தி நம் எதிர்கால சிந்தனையையும், செயல்களையும் வருத்திக் கொள்ளாமல், எது நடந்தாலும் நன்மைக்கே என்ற நேர்மறை எண்ணம் (Positive Thinking) கொள்வது அந்த ஒரு செயல் நடக்காமல் போனாலும், நாம் எதிர்கொள்ளும் மற்ற செயல்களை கவனத்துடன் மேற்க் கொள்ள உதவும், வெற்றிக் கொள்ள உதவும், மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். நாம் ஒன்றை நடக்கும் என்று எண்ணியோ அல்லது ஒன்றை எதிர்பார்த்ததோ நடக்காவிட்டால் அதன் மூலம் வேறு எதோ நன்மை இருக்கிறது என்று நம்புவதே சிறந்த நேர்மறை என்னத்திற்கு அழகு, விரக்தி அடைவதால் கடவுளின் நாட்டம் இன்றி எதையும் ...