Posts

Showing posts with the label இஸ்லாம்

மோனிகா என்ற ரஹீமாவின் திருமணமும், மனிதர்கள் போர்வையில் மிருகங்களின் வசை பாடும் ......

Image
அளவற்ற   அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்   திருபெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும்     வரஹ்மாதுல்லாஹி வ   பரக்காத்தஹு... எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ , அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள் ;   பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.     (அல் குர்-ஆன்   24:4 ) மோனிகா என்கின்ற ரஹீமா   இஸ்லாத்திற்கு மதம் மாறி கிட்டத்தட்ட   ஆறு , ஏழு   மாதங்கள் மேலாகிவிட்ட து. அவர்   “ ‘ பணத்திற்காகவோ காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன் என்று எதற்காக மாறினார் என்ற விளக்கத்தை நேரடியாக பதிவு செய்த பிறகும் பணத்திற்காக மாறியுள்ளார் , ஷேக்கை   திருமணம் முடிக்க இந்த பிளான் , பைத்தியம் பிடித்து விட்டது அது , இது என்று அவரை தூற்றி எடுத்த மக்கள் இன்று மேலும் அவர் திருமணத்திலும் பல கேடு கெட்ட வார்த்தைகளை தூவி வாழ்த்த...

உலக ஹிஜாப் தினம் - பிப்ரவரி 1

Image
அளவற்ற அருளாளனும் ,  நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... ஹிஜாப் அணிவது குறித்த தவறான புரிதல்களை களைவதற்காக பிப்ரவரி 1- ஆம் தேதி ஹிஜாப் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார் நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹிஜாப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பங்களாதேசை சேர்ந்த தற்பொழுது நியூயார்க்கை இருப்பிடமாக கொண்டுள்ள நஜ்மா கான் என்பவர் ‘உலக ஹிஜாப் தினம்’ என்ற சிந்தனையை முதல் முறையாக முன்வைத்தார். அமெரிக்காவில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்ற இவருக்கு அவரது பள்ளியில் நடந்த பாகுபாடும், அதனால் இழைக்கப்பட்ட மன உளைச்சலுமே இப்படி ஒரு தினத்தை உருவாக்க காராணமாக அமைந்துள்ளது. 22 மொழிகளில் இவர்களுடைய சிந்தனை பரப்புரை செய்யப்படுகிறது. முகநூல், வலைத்தளம் என்று இத்தினத்தை பரப்புரை செய்த இச்சகோதரிகளுக்கு உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ். இது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக முழுவதும் ஐ...