Posts

Showing posts with the label பொதுவானவை

இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)

Image
பொதுவாவே பள்ளி படிக்கும் காலங்களில் பள்ளியில் தினமும் சாம்பார் சாதம் தான் போடுவாங்க சத்துணவு என்ற பேரில்... சாம்பாருக்காக பயன்படுத்தப்படும் பருப்பு ஒருவித சிவப்பு கலர்ல இருக்கும்.. ரொம்ப ஈசியா வெந்துடும்.. பேர் மசூர் தால்னு சொல்வாங்க.. செம்ம வாடையா (துர்நாற்றமாக) இருக்கும். அந்த வாடை சிலருக்கு பிடிக்கும் , பலருக்கு பிடிக்காது. ஆனாலும் பள்ளிக்கூட சாப்பாட்டையே சாப்பிடும் நிலை உள்ளவர்களுக்கு அதெல்லாம் பெரிய வாடையா இருக்காது.. இன்னும் சொல்லப் போனா, சத்துணவு என்று பள்ளிக் கூடங்களில் போடப்படும் பெரும்பாலான உணவு சத்தை விட நோயையே அதிகம் தருகிறது.. காரணம் புழு பூச்சிகள் நிறைந்த அரிசி , அத சரியா கழுவக் கூட சோம்பேறித்தனம் படும் சத்துணவு பொறுப்பாளிகள். அந்த சோற வடிச்சு ஒரு சாக்குல கொட்டுவாங்க பாருங்க.. அந்த சாக்கு சுத்தம் செய்து கழுவாம கூட அது மேலையும் , இது மேலையும் சுத்தமற்ற பல இடத்தில் போட்டு காய விடுவாங்க..  இது அனைத்து பள்ளிகளிலும் அப்படி நடக்கிறதா என்று தெரியாவிட்டாலும் சில பள்ளிகளில் நடந்தது உறுதி, கண்ணால் கண்டவர்களில் நானும் ஒருவள். அதாவது நான் ...

மனிதத்தை உணருங்கள்!!!

Image
இறைவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!!! எந்த தவறும் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதும் காலங்காலமாக சிலரால் சிலர் அனுபவித்து வருவது எங்கெங்கும் நம்மால் காண முடிகிறது. நாம் இந்தியாவில் வாழ்வில் இந்தியாவையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒருவர் எந்த வித குற்றமே செய்யாமல் அவர் தண்டனையா?? அனுபவிக்கிறார் என்றால் ஒன்று அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவோ அல்லது தலித் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றப்படுத்தலாம், அவர்கள் விரும்பியதை உண்பதை தடுக்கலாம் அதற்காக மிருகத்தை விட மோசமாக சித்திரவதை செய்யலாம் என்ற கோட்பாட்டை, வெறியை ஆதிக்க சக்தியினர் என்றென்றும் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். அதை புற்றுநோய் போல் எங்கெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களின் கோட்பாட்டை இவர்களோடு நில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களிடமும், மற்றவர்கள் அறியாத அளவில் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளதும், அதனை சிந்திக்காமல் அதை அவர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் மிகவும் வேதனைக...

~~~~ சினிமாவும் வில்லத்தனமும் ~~~

Image
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... எனக்கு சின்ன வயதில் நடந்த பெரும்பான்மையான விசயங்கள் நினைவில் நிற்பதில்லை. அது எனக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. இது நிறைய பேரிடத்தில் உள்ளது. ஆனால் அதையும் மீறி நம் வாழ்வில் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள் நம் மரணம் வரை நம் மனதின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து, தருணம் பார்த்து எட்டி பாக்கும். அப்படித்தான் இதுவும். நான் அப்போ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அஞ்சாம் வகுப்பு வரை உள்ள ஒரு ஸ்கூலில் இருந்து அப்போ தான் ஹை ஸ்கூலுக்கு மாறினேன். இந்த சின்ன ஸ்கூல்ல இருந்து ஹை ஸ்கூலுக்கு போறோம்னு அந்த வயசுலேயே பெரிய படிப்பு படிக்க போறாப்ள மனதுக்குள் ஏதோ பயங்கர சந்தோசம், பட் பதட்டம். ஏன்னா புது ஸ்கூல், புது ஆட்கள், புது ஆசிரியர்கள், புது இடம் என்று எல்லாம் ஒரு வித பயத்தை கொடுத்தது.. நான் நினைச்ச மாதிரியே எல்லாம் புது புது முகங்கள், முதல் வரிசையில் உக்கார ஒரே அடி தடி.. ஏன்னா அது கேர்ல்ஸ் ஒன்லி ஸ்கூல்.. பெண்களுக்குள் எப்பவும் போட்டி இருக்கத்தானே செய்யும். அப்படி அடிச்சு பிடிச்சு ம...