Posts

Showing posts from November, 2018

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்

Image
இக்காலங்களில் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துக் கொண்டே வந்தாலும், ஆங்காங்கே வருடந்தோறும் நடக்கும் புத்தக கண்காட்சி புத்தக புழுக்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையாது. அதே போல் இந்த வருடமும் அமீரகத்தில், 37- வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. கடந்த வெள்ளி அன்று சென்று வர வாய்ப்புக் கிடைத்தாலும், செல்ல வேண்டும் என்ற நோக்கம் கடந்த வருடத்தில் கண்ட ஏமாற்றத்தை நிரப்ப இந்த வருடம் தமிழுக்கென்று பிரத்யோக தமிழ் கடைகள் அமைக்கவிருப்பதை அறிந்த பின் ஆர்வம் இரட்டிப்பாகானது. புத்தகம் என்றாலே தூக்க மருந்து என்றாகி போனாலும், நம் மொழிக்கான அங்கீகாரம் நம் வசிக்கும் அயல் நாட்டில் கிடைக்கிறது என்றால் சுண்டி இழுக்கத்தானே செய்யும். Hall No:7, ZB4 -ல் பபாசி மூலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள தமிழுக்கான கடையை நோக்கி விரைந்ததும் அகண்ட கண்கள் சுருங்கவில்லை, எத்தனை எத்தனை புத்தங்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்களின் படைப்புகள், வித்தியாசமான தலைப்புகளில் பல புத்தகங்கள் இருந்தாலும் நமக்கு அறியப்பட்ட சில எழுத்