Posts

Showing posts from January, 2014

~~~~ சினிமாவும் வில்லத்தனமும் ~~~

Image
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... எனக்கு சின்ன வயதில் நடந்த பெரும்பான்மையான விசயங்கள் நினைவில் நிற்பதில்லை. அது எனக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. இது நிறைய பேரிடத்தில் உள்ளது. ஆனால் அதையும் மீறி நம் வாழ்வில் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள் நம் மரணம் வரை நம் மனதின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து, தருணம் பார்த்து எட்டி பாக்கும். அப்படித்தான் இதுவும். நான் அப்போ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அஞ்சாம் வகுப்பு வரை உள்ள ஒரு ஸ்கூலில் இருந்து அப்போ தான் ஹை ஸ்கூலுக்கு மாறினேன். இந்த சின்ன ஸ்கூல்ல இருந்து ஹை ஸ்கூலுக்கு போறோம்னு அந்த வயசுலேயே பெரிய படிப்பு படிக்க போறாப்ள மனதுக்குள் ஏதோ பயங்கர சந்தோசம், பட் பதட்டம். ஏன்னா புது ஸ்கூல், புது ஆட்கள், புது ஆசிரியர்கள், புது இடம் என்று எல்லாம் ஒரு வித பயத்தை கொடுத்தது.. நான் நினைச்ச மாதிரியே எல்லாம் புது புது முகங்கள், முதல் வரிசையில் உக்கார ஒரே அடி தடி.. ஏன்னா அது கேர்ல்ஸ் ஒன்லி ஸ்கூல்.. பெண்களுக்குள் எப்பவும் போட்டி இருக்கத்தானே செய்யும். அப்படி அடிச்சு பிடிச்சு ம

மனிதர்கள் நன்றி கெட்டவர்களே!!!

அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... ஆம்! அனேக நேரங்களில் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். இது  யாரும் மறுக்க இயலாத உண்மை. இவ்வுலகில் நாம் எதிர் பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நடப்பதில்லை, ஆனால் எதிர் பார்க்காத, நாம் கேட்காத எத்தனையோ நல்ல விசயங்களும் நம் வாழ்வில் நடை பெறவே செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.. அப்படி நடக்கும் பொழுது நாம் சந்தோஷ மிகுதியிலும், உற்சாகத்திலும் அதை யாரிடம் சொல்வது, எப்படி சந்தோசத்தை இரட்டிப்பாக்குவது என்று சிந்திக்கிறோமே தவிர அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கவே செய்கிறோம். இது அனைவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு தருணங்களிலாவது நடைபெறவே செய்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டியுள்ளது. இதில் சிலர் விதி விலக்காக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ். இவ்வுலகை பரிபாலித்து, நம் தேவையை தகுத்த நேரத்தில் தகுந்த இடத்தில் பூர்த்தி செய்யும் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கும் நாம்,  நமக்கு தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ, நண்பர்களோ,  நம் அலுவலகத்தில் உள்ளவர்களோ நமக்கு சிறு உதவி செய்தாலும் மறக்காமல் அதற்

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

Image
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு.... நம்முடைய ஒவ்வொரு செயலும் எண்ணப்படியே அமைகின்றன.  அது உடனடியாக இருக்கலாம் இல்லையெனில் சற்று காலங்கள் கழித்தும் நடக்கலாம். இதனால் நாம் என்னும் எண்ணங்கள் நல் வழியில் அமைத்துக் கொண்டால் அதன் பலனும் நன்மையாகவே அமையும், இதனால் தீமையை விட்டு விலகி நிற்போம். ஒரு வேளை நாம் எண்ணும் அந்த செயல் நடக்காமல் போய் விட்டால், அதை நினைத்து வருந்தி நம் எதிர்கால சிந்தனையையும், செயல்களையும் வருத்திக் கொள்ளாமல், எது நடந்தாலும் நன்மைக்கே என்ற நேர்மறை எண்ணம் (Positive Thinking) கொள்வது அந்த ஒரு செயல் நடக்காமல் போனாலும், நாம் எதிர்கொள்ளும் மற்ற செயல்களை கவனத்துடன் மேற்க் கொள்ள உதவும், வெற்றிக் கொள்ள உதவும், மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். நாம் ஒன்றை நடக்கும் என்று எண்ணியோ அல்லது ஒன்றை எதிர்பார்த்ததோ நடக்காவிட்டால் அதன் மூலம் வேறு எதோ நன்மை இருக்கிறது என்று நம்புவதே சிறந்த நேர்மறை என்னத்திற்கு அழகு, விரக்தி அடைவதால் கடவுளின் நாட்டம் இன்றி எதையும் நம்ம