Posts

Showing posts from 2017

கறுப்பு பணம் – கறுப்பு தினம் – நவம்பர் 8

Image
ஆம் நவம்பர் 8, மறக்கமுடியுமா.. பல கோடி மக்களின் வயிற்றில் அடித்த தினம், அடிமட்ட மக்களை ஆட்டிப்படைத்த தினம். இதே நாள், கடந்த வருடம் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த தினம். ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று இருமாப்பு கொண்டோரின் இதயத்தையும் ஆட்டுவித்த தினம். கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன், புதிய இந்தியாவை பிறப்பிக்கிறேன் என்று எவ்வித முன்னேற்ப்பாடும் இல்லாமல் பண முதலைகளின், பணத்தை காக்க இருட்டடிப்பு செய்த தினம். சாமானிய மக்களின் வாழ்வை சாகச வாழ்வாக மாற்றிய தினம். மறக்க முடியுமா?? தன் உழைப்பில் உருவான சேமிப்பைக் கூட அடுத்தவர் கட்டளையின் படி தான் செலவழிக்க முடியும் என்று இக்கட்டான சூழலுக்கு தள்ளிய தினம். “எங்களிடம் தாருங்கள், உங்கள் பணத்தை பாதுகாக்கிறோம். பாதுகாக்க கூலியை நீங்கள் தர வேண்டாம், வட்டியாக நாங்கள் தருகிறோம் என்று கூவி அழைத்து, சேமிப்பை கணக்கை துவங்க வைத்த வங்கிகளெல்லாம், “ 2000 தான் தர முடியும், நீ எம்புட்டு வச்சு இருந்தா என்ன, நாளைக்கு வா என்று நம் பணத்தை வைத்தே நம் சுயமரியாதையை ஏளனம் செய்த தினம்”. வேலைக்கு செல்ல இயலாமல், அன்றாடம் சம்பாதிக்கும் தினக் கூ

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

Image
உலகிலேயே சர்வேதச புத்தக கண்காட்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது தான் ஷார்ஜா, எக்ஸ்போ சென்டரில் நடக்கும் புத்தக கண்காட்சி. இம்மாதம் 1  முதல் 11 வரை நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் உலக அளவில் பல தரப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், பல மொழிகளின் புத்தகங்களும் ஒன்றே சங்கமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் தமிழுக்கு தான் இல்லை இப்படி ஒரு வாய்ப்பு. ஆம் கடந்த 3- ஆம் தேதி பலதரப்பட்ட திட்டங்களோடு சென்ற எங்களுக்கு கிடைத்தது பல ஏமாற்றங்கள், இருப்பினும் புது வித அனுபவமாக இருந்தது. தி.மு.க செயல்தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் நிகழ்ச்சி, சில தோழிகளின் சந்திப்பு மற்றும் அதனூடே புத்தகங்களை பார்வையிடவும் திட்டமிட்டு சென்றிருந்தோம்.. நான்கு மணிக்கு திறக்கப்பட்ட வளாகத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்பதற்காக செலவழித்தோம். உனக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் அங்க போன? என்று கேட்கும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வர செவியை கிழிக்கும் அளவில் கேட்கிறது. உண்மை தான், நம்மூர் தலைவர இவ்வளவு ஈசியா பாக்க கூடிய வாய

உயிர் கொல்லும் வட்டிக்கு தடை – அன்றே விதித்தது இஸ்லாம்

Image
கடந்த இரண்டு தினங்களாக பரப்பராக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம், பலரின் தூக்கத்தை பறித்த ஒரு விசயம், ஏன் பலரின் மனிதாபிமானத்தை அடி ஆழம் வரை சென்று உலுக்கிய விசயம் என்னவெனில், நெல்லையில் ஒரு குடும்பமே எரிந்து சாம்பலானது பற்றியே.. கந்துவட்டி கொடுமையால், அசலுக்கு மேல் வட்டி செலுத்தியும் தனது கடனில் இருந்து மீள முடியாமல் பலத்த அவமானங்களுக்கு பிறகு, பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்பும் தீர்வு வராத பட்சத்தில், தீர்வுக்காக போராடிய அதே கலெக்டர் அலுவலகம் முன்பு கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு வயதே ஆனா பச்சிளம் பாலகன், ஐந்து வயது மகள், மனைவி என்று தனது குடும்பத்திற்கு தானே தீ வைத்து எரித்து, எரித்துக் கொண்ட சம்பவம் பார்ப்பவரையும், கேட்பவரையும் இன்று தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. ஒருவருக்கு பொருளாதாரம் என்பது அத்தியாவசியமானதே, தனது தேவைக்கேற்ற வருமானம் இல்லை எனும்போது விரும்பியே விரும்பாமலோ கடன் படும் சூழலுக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர். ஆனால் வாழ்வதற்காக வாங்கும் கடன் நம் உயிரையே மாய்க்கும் என்று ஒருவரும் தெரிந்தே வாங்குவதில்லை. அதிலும் பெரும்பான்மையான மக்கள் ப

இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)

Image
பொதுவாவே பள்ளி படிக்கும் காலங்களில் பள்ளியில் தினமும் சாம்பார் சாதம் தான் போடுவாங்க சத்துணவு என்ற பேரில்... சாம்பாருக்காக பயன்படுத்தப்படும் பருப்பு ஒருவித சிவப்பு கலர்ல இருக்கும்.. ரொம்ப ஈசியா வெந்துடும்.. பேர் மசூர் தால்னு சொல்வாங்க.. செம்ம வாடையா (துர்நாற்றமாக) இருக்கும். அந்த வாடை சிலருக்கு பிடிக்கும் , பலருக்கு பிடிக்காது. ஆனாலும் பள்ளிக்கூட சாப்பாட்டையே சாப்பிடும் நிலை உள்ளவர்களுக்கு அதெல்லாம் பெரிய வாடையா இருக்காது.. இன்னும் சொல்லப் போனா, சத்துணவு என்று பள்ளிக் கூடங்களில் போடப்படும் பெரும்பாலான உணவு சத்தை விட நோயையே அதிகம் தருகிறது.. காரணம் புழு பூச்சிகள் நிறைந்த அரிசி , அத சரியா கழுவக் கூட சோம்பேறித்தனம் படும் சத்துணவு பொறுப்பாளிகள். அந்த சோற வடிச்சு ஒரு சாக்குல கொட்டுவாங்க பாருங்க.. அந்த சாக்கு சுத்தம் செய்து கழுவாம கூட அது மேலையும் , இது மேலையும் சுத்தமற்ற பல இடத்தில் போட்டு காய விடுவாங்க..  இது அனைத்து பள்ளிகளிலும் அப்படி நடக்கிறதா என்று தெரியாவிட்டாலும் சில பள்ளிகளில் நடந்தது உறுதி, கண்ணால் கண்டவர்களில் நானும் ஒருவள். அதாவது நான் படித