Posts

Showing posts from February, 2016

கல்வியா (ஆ???)

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஒருவரை பண்படுத்தக் கூடிய கல்வி என்பது இன்று எட்டாக்கனியாக மாறி வருகிறது என்றால் மிகையாகாது. கல்வி என்றாலே மார்க்கட்டுகளில் கிடைக்கக் கூடிய விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று போல் ஆகி வருகிறது. “கல்வி” என்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பை பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவரும் எடுத்தாளும் தலைப்பாக இருக்கிறது, இதை பற்றி அவர்கள் மனதில் தோன்றியதை கட்டுரைகளாக, பட்டிமன்றமாக, குறும்படமாக இயக்கி இந்த சமூகத்தில் உலாவர செய்துள்ளனர். அப்படி செய்தும் ஏன் அது இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை, ஏன் என்று சற்றே சிந்திப்போமாக!!! கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஒரு சான்று.. நபி ஸல் அவர்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை காண விரும்பிய போது, நபி ஸல் அந்த இளைஞர்களுக்கு விதித்த முதல் கட்டளை, ' நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள்.   அறிவிப்பவர்: அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) - ஸஹீஹ் புகாரி