Posts

Showing posts with the label புத்தக கண்காட்சி

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

Image
உலகிலேயே சர்வேதச புத்தக கண்காட்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது தான் ஷார்ஜா, எக்ஸ்போ சென்டரில் நடக்கும் புத்தக கண்காட்சி. இம்மாதம் 1  முதல் 11 வரை நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் உலக அளவில் பல தரப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், பல மொழிகளின் புத்தகங்களும் ஒன்றே சங்கமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் தமிழுக்கு தான் இல்லை இப்படி ஒரு வாய்ப்பு. ஆம் கடந்த 3- ஆம் தேதி பலதரப்பட்ட திட்டங்களோடு சென்ற எங்களுக்கு கிடைத்தது பல ஏமாற்றங்கள், இருப்பினும் புது வித அனுபவமாக இருந்தது. தி.மு.க செயல்தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் நிகழ்ச்சி, சில தோழிகளின் சந்திப்பு மற்றும் அதனூடே புத்தகங்களை பார்வையிடவும் திட்டமிட்டு சென்றிருந்தோம்.. நான்கு மணிக்கு திறக்கப்பட்ட வளாகத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்பதற்காக செலவழித்தோம். உனக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் அங்க போன? என்று கேட்கும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வர செவியை கிழிக்கும் அளவில் கேட்கிறது. உண்மை தான், நம்மூர் தலைவர இவ்வளவு ஈசியா பாக்க கூடிய...