உலக ஹிஜாப் தினம் - பிப்ரவரி 1

அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... ஹிஜாப் அணிவது குறித்த தவறான புரிதல்களை களைவதற்காக பிப்ரவரி 1- ஆம் தேதி ஹிஜாப் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார் நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹிஜாப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பங்களாதேசை சேர்ந்த தற்பொழுது நியூயார்க்கை இருப்பிடமாக கொண்டுள்ள நஜ்மா கான் என்பவர் ‘உலக ஹிஜாப் தினம்’ என்ற சிந்தனையை முதல் முறையாக முன்வைத்தார். அமெரிக்காவில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்ற இவருக்கு அவரது பள்ளியில் நடந்த பாகுபாடும், அதனால் இழைக்கப்பட்ட மன உளைச்சலுமே இப்படி ஒரு தினத்தை உருவாக்க காராணமாக அமைந்துள்ளது. 22 மொழிகளில் இவர்களுடைய சிந்தனை பரப்புரை செய்யப்படுகிறது. முகநூல், வலைத்தளம் என்று இத்தினத்தை பரப்புரை செய்த இச்சகோதரிகளுக்கு உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ். இது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக முழுவதும் ஐ...