மோனிகா என்ற ரஹீமாவின் திருமணமும், மனிதர்கள் போர்வையில் மிருகங்களின் வசை பாடும் ......

அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரக்காத்தஹு... எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ , அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள் ; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல் குர்-ஆன் 24:4 ) மோனிகா என்கின்ற ரஹீமா இஸ்லாத்திற்கு மதம் மாறி கிட்டத்தட்ட ஆறு , ஏழு மாதங்கள் மேலாகிவிட்ட து. அவர் “ ‘ பணத்திற்காகவோ காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன் என்று எதற்காக மாறினார் என்ற விளக்கத்தை நேரடியாக பதிவு செய்த பிறகும் பணத்திற்காக மாறியுள்ளார் , ஷேக்கை திருமணம் முடிக்க இந்த பிளான் , பைத்தியம் பிடித்து விட்டது அது , இது என்று அவரை தூற்றி எடுத்த மக்கள் இன்று மேலும் அவர் திருமணத்திலும் பல கேடு கெட்ட வார்த்தைகளை தூவி வாழ்த்த...