மோனிகா என்ற ரஹீமாவின் திருமணமும், மனிதர்கள் போர்வையில் மிருகங்களின் வசை பாடும் ......

அளவற்ற  அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்  திருபெயரால் துவங்குகிறேன்...

அஸ்ஸலாமு அழைக்கும்  வரஹ்மாதுல்லாஹி வ பரக்காத்தஹு...

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ,அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.  (அல் குர்-ஆன் 24:4)

மோனிகா என்கின்ற ரஹீமா  இஸ்லாத்திற்கு மதம் மாறி கிட்டத்தட்ட  ஆறு, ஏழு  மாதங்கள் மேலாகிவிட்டது. அவர்  “பணத்திற்காகவோ காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன் என்று எதற்காக மாறினார் என்ற விளக்கத்தை நேரடியாக பதிவு செய்த பிறகும் பணத்திற்காக மாறியுள்ளார், ஷேக்கை  திருமணம் முடிக்க இந்த பிளான், பைத்தியம் பிடித்து விட்டது அது, இது என்று அவரை தூற்றி எடுத்த மக்கள் இன்று மேலும் அவர் திருமணத்திலும் பல கேடு கெட்ட வார்த்தைகளை தூவி வாழ்த்து மழை பொழிகின்றனர்.






ஒருவரின் பொது வார்த்தை பிரோயகங்களை கண்டே அவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் உணர முடியும். அவரின் திருமணத்தை தூற்றி முகநூலிலும்செய்தி தாள்களிலும் கேட்போரின் காதையும்பார்ப்போரின் கண்ணையும் மூடிக் கொள்ளும் அளவுக்கு கொச்சை  வார்த்தைகளில் கமென்ட் இடும் மக்களின் உண்மை முகம்பால் குடிக்கும் பச்சை குழந்தையும் அறியும்அது அவர்கள் மோனிகா என்ற ரஹீமா மீது வைத்துள்ள வெறுப்பு அல்ல இஸ்லாத்தின் மீதுள்ள அச்சம் என்று. இஸ்லாத்தின் வளர்ச்சியின் மீதுள்ள கோபம் என்று.

ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் மட்டும் அதை துருவி தோண்டி எடுத்து ஆராய விரும்பும் மக்கள், காமாலை கண் கொண்டு பாராமல் இஸ்லாத்தின் தூய்மையை உணர விரும்பும் போதே அதன் உண்மை நிலைமை உணர முடியும். 

சிறு வயது முதல் திரையுலகில் நடித்து வந்த மோனிகா என்ற ரஹீமா பல  பிரபலங்களை தன் நட்பு வட்டத்தில் வைத்திருந்தும் ஒருவரை கூட  அழைத்து ஆடம்பரம் செய்யாமல் இஸ்லாத்தின் முறையில் திருமணம் முடித்ததை உங்களால் எவ்வாறு குறை கூற முடியும். பல கோடி ரூபாய் அழிவை கொண்டு ஊர் போற்றுவதற்காக திருமணம் முடிக்கும் மக்களிடையே நபி ஸல் கூற்றுப்படி ஆர்பாட்டம், ஆடம்பரம் செய்யாமல் அழகான முறையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் மருமகளாக வாக்கப்பட்டதை  குறை கூற உங்களுக்கு  என்ன காரணம் உண்டு.
குடும்பம், தொழில், வேலை என்று பலவற்றில் அமைதியின்மையை காணுகின்ற பல பிரபலங்களை நம் கண் முன் காண முடிகிறது. ஒவ்வொருவரும் அமைதியை தேடி அலையும் பொழுது உண்மையான அமைதியை கொண்டுள்ள இஸ்லாத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் என்ன குற்றம் கண்டுபிடிக்க முடியும் உங்களால்.

மேலும் ஒருவரது சொந்த வாழ்க்கையிலும், அவரது தேர்ந்தேடுப்பிலும் குறை கூற உங்களுக்கு உரிமை அளித்தது யார்? அந்த மாப்பிள்ளை ஒரு கிழவன், அவன் அழகற்றவன் என்றும், ரஹீமாவின் குணங்களையும் முந்திய வாழ்க்கையையும் கேவலப்படுத்தி சொற்களை வீசி இதற்காக தான் மதம் மாறினாயா என்று கேள்வி எழுப்பும் அறிவீலிகளே உங்கள் கேள்வியில் உள்ள மடமைத்தன்மையை உணர்வீர்களா? இல்லையா?.




அவர் அந்தஸ்திற்காகவும், அழகிற்காகவும் ஆடம்பரமாக ஒருவரை திருமணம் செய்து இருந்தால் கூட உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கிறது என்று கூறலாம். இதுவே அவர் ஒரு அந்தஸ்து மிக்க அழகான மாப்பிள்ளையை கல்யாணம் செய்து இருந்தால் இதற்காகத் தான் மதம் மாறி போனாயா என்பீர்கள், மதில் மேல் பூனையாய் இருக்கும் உங்கள் மனதை ஒருநிலை படுத்திவிட்டு மற்றவர்களை குறை கூற உங்கள் வாயை திறங்கள். நபி ஸல் அவர்களின் வாக்குப் படி திருமணம் செய்துக் கொண்ட அவரை தூற்ற இவ்வுலகில் யாருக்கும் தகுதி இல்லை.

நபி ஸல் கூறினார்கள்:-

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக 
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக
3.  அவளுடைய அழகிற்காக 
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவிகிறார்கள்.  (ஸஹீஹில் புஹாரி. 5090)

மேற்க்கண்ட  ஹதீஸானது ஆண்/பெண் இருவருக்கும்  பொருந்தும். ஒருவர் மார்க்க நல்லொழுக்கம் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொழுது அவருடைய அழகோ, அந்தஸ்தோ, வயதோ தேவை இல்லை. அவர்  அப்படி தேர்ந்தெடுத்து இருந்தால் அவர் தான் சரியான மூஃமின், சரியான பயணத்தில் இருக்கின்றார். ஏனென்றால் இஸ்லாத்தின் உன்னத தலைவர் நபி ஸல் அவர்களோ தன்னை விட பதினைந்து வயது மூத்த பெண்ணையே முதன் முதலில் திருமணம் முடித்துக் கொண்டார். அவர்களின் வழிகாட்டுதலில் பயணிக்கும் மூமின்களை குறை கூற உங்களுக்கே என்ன உரிமை இருக்கிறது??

அடுத்தவர்களின் வாழ்க்கையிலும், அந்தரங்கத்திலும் மூக்கை விடும் முன் நம்  நிலை என்னவென்பதை கூற யாருக்கேனும் தகுதி உண்டா?? இன்று அடுத்தவர்களை பேச துணியும் உங்களை, நாளை மற்றவர்கள் பேச ஒரு நிமிடம் போதாது என்பதை மனதில் வையுங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது வாழ்வின் ஒவ்வொரு விசயத்திற்கும் பொருந்தும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்றார்கள் என அதீ பின் ஹாத்திம் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹில் புஹாரி. 6023)

கத்தியை விட கூர்மையான வார்த்தைகளை கொண்டு மென்மையான மனிதர்களின் உள்ளங்களை, உணர்வுகளை கொல்லாதீர்கள். முடிந்தால் அழகிய இன் சொற்கள் கொண்டு உபதேசியுங்கள், இல்லையெனில் கண் மூடி, வாய் மூடி ஒதுங்கி நில்லுங்கள். அதுவே சிறந்த மனிதனுக்கு அடையாளம்.

இவ்வுலக வாழ்க்கையை சுகமாக கருதும் அற்ப மனிதர்களுக்கு இடையில் ஈமானோடு வாழ்வது கடினமே என்றாலும் அல்லாஹ்வின் உதவி இருக்கும் பட்சத்தில் மனிதர்களின் உதவி எதற்கு. அல்லாஹ்வின் உதவி கிடைத்ததனாலேயே சகோதரி ரஹீமா இஸ்லாத்திற்கு மாறியதோடு மட்டுமல்லாமல் அவர் இருந்த நரக வாழ்வான சினிமாவில் இருந்து முற்றிலும் வெளி வந்து விட்டார்.... அல்ஹம்துலில்லாஹ்..

சினிமா என்னும் தவறான வழியில் இருந்த வரை கூட அவரை போற்றி புகழ்ந்த மக்கள் இன்று நேரான பாதையில் அனைத்து தீயவற்றிலிருந்தும் விலகிய பின் குத்தி ரணமாக்குவது மன்னிக்க முடியாத செயல் அல்லவோ!!!

மரணத்திற்கு முன் நரகில் இருந்து உங்களை காத்துக் கொள்ள, இஸ்லாத்தில் நுழைந்து அதில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ரஹீமா அவர்களுக்கும், அவரை மணம் முடித்துக் கொண்ட குடும்பத்தார்க்கும் வல்ல இறைவைனின் உதவி என்றென்றும் கிடைக்குட்டுமாக.. ஆமின்..

டிஸ்கி: அழகானவர்கள் மட்டுமே மனிதர்கள், அவர்களையே திருமணம் முடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதரும் நினைத்தால் பாதி பேருக்கு வாழ்க்கை கிடைக்காது. மேலும் அழகு, அறிவு, அந்தஸ்து என்று எதையும், நம் கருவில் இருக்கும்போது நாமோ, நம்  தாயோ நிர்ணயிப்பதில்லை. அனைத்தையும் வகுப்பவன் இறைவன் ஒருவனே. அவன் வகுத்ததை யாராலும் மாற்ற இயலாது. இறைவனின் படைப்பில் ஒன்றை வெறுத்து ஒன்றை  ஒதுக்காதீர்கள்.

உங்கள் சகோதரி
யாஸ்மின் ரியாஸ்தீன் 


Comments

  1. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ,அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல் குர்-ஆன் 24:4)

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அறிவீனர்களின் செயலை நாம் சலாம் கூறி கடந்து செல்வோம். இறைவன் இவர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சிக்காரன். அருமையான கட்டுரை.

    ReplyDelete
  3. யாஸ்மின்... தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்கு உங்கள் கருத்து...

    "குறை கூறி புறம் பேசு திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்" - அல் குர்ஆன் 104 : 1

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்