வீட்ல யாரும் இல்லைங்கோ!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ... முன்பெல்லாம் நம் வீட்ல நடக்கும் சில பல விசயங்களை நம் கூட படிக்கும், வேலை பார்க்கும் இடத்தில், ஃபிரண்ட்ஸ்கிட்ட என்று நமக்கு நெருங்கியவர்களிடம் சேர் பண்ணி சிரிப்போம், கவலைப்படுவோம்.. இப்போ டெக்னாலஜி வளர்ந்துட்டதாலயோ என்னவோ நம் அருகில் இருக்கும் தாய், தந்தை, கணவன், பிள்ளைங்ககிட்ட பேசுவதும், அன்றாடம் நடக்கும் விசயங்களை அவர்களிடம் சேர் பண்ணுவதும் குறைஞ்சு போய் ஃபேஸ்புக், டவீட்டர்னு ஸ்டேடஸ் போட்டு தனியாக புலம்புவதை நம் மக்கள் ட்ரன்ட்டா வச்சு இருக்காங்க.. சரி பொதுவான விசயங்களை, கருத்துக்களை பகிர்வதால் ஒன்னும் பிரச்சினை வரப் போவது இல்லை. ஆனா நம் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கின்ற, பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவையான, சொல்லக் கூடாத, பகிரக் கூடாத விஷயங்கள்னு சிலவையும் இருக்குல்ல.. சில மனைவிமார்கள் என்ன செய்றாங்கன்னு...