வீட்ல யாரும் இல்லைங்கோ!!!

எல்லாம்  வல்ல  அல்லாஹ்வின்  திருப்பெயரால் ...

முன்பெல்லாம் நம்  வீட்ல  நடக்கும்  சில  பல  விசயங்களை  நம்  கூட  படிக்கும், வேலை  பார்க்கும் இடத்தில், ஃபிரண்ட்ஸ்கிட்ட என்று நமக்கு நெருங்கியவர்களிடம் சேர்  பண்ணி  சிரிப்போம், கவலைப்படுவோம்.. இப்போ  டெக்னாலஜி வளர்ந்துட்டதாலயோ என்னவோ  நம்  அருகில் இருக்கும்  தாய், தந்தை, கணவன், பிள்ளைங்ககிட்ட  பேசுவதும், அன்றாடம்  நடக்கும் விசயங்களை  அவர்களிடம் சேர்  பண்ணுவதும் குறைஞ்சு  போய்  ஃபேஸ்புக், டவீட்டர்னு ஸ்டேடஸ் போட்டு தனியாக புலம்புவதை  நம் மக்கள்  ட்ரன்ட்டா வச்சு  இருக்காங்க..

சரி  பொதுவான  விசயங்களை, கருத்துக்களை  பகிர்வதால் ஒன்னும்  பிரச்சினை  வரப் போவது இல்லை. ஆனா நம் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கின்ற, பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவையான,  சொல்லக் கூடாத,  பகிரக் கூடாத  விஷயங்கள்னு சிலவையும் இருக்குல்ல..

சில மனைவிமார்கள்  என்ன  செய்றாங்கன்னு  பாத்தா, அப்பாடா  சூரியன் முழிக்கும் முன்னே  முழிச்சேங்க, இப்போ தான்  ரிலாக்ஸ்  ஆகுறேன்.. மாமியார், மாமானார் வெளிய போய்ட்டாங்க, கணவர் ஆபிஸ் போயிட்டார், பிள்ளைங்க ஸ்கூல் போய்ட்டாங்க.. ஒருவழியா எல்லாரையும் பேக்அப் பண்ணிட்டு  இப்போ தான்  தனியா நான்  மட்டும் வீட்ல  ரிலாக்ஸ்ஆ இருக்கேன்.. என்ன  ஒரு ஆனந்தம்னு அவங்களே  வாக்குமூலம்  கொடுக்குறாங்க.. அதுவும்  எங்க  ஃபேஸ்புக், டவீட்டர்ல..

சரி கல்யாணம் ஆன மனைவிமார்கள் தான் அப்படின்னா கணவன்கள் மட்டும் என்ன சும்மாவா.. மனைவி வேலைக்கு போய்ட்டா.. பசங்க ஸ்கூல் போய்ட்டாங்க.. நான்  எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல கொஞ்சம் தனியா  ஃபேஸ்புக்ல நிம்மதியா  ரெஸ்ட் எடுக்கறேங்க என்று ஒரு ஸ்டேடஸ் போடுவார். இத அவர் கம்பெனி ஓனரோ, மேனஜரோ பாத்தா “சிக் லீவ்”-வுனு சொல்லிட்டு ஃபேஸ்புக்லயா கிடைக்குற என்று வேலைக்கே  ஆப்புதான்.

இதே போல் காலேஜ், ஸ்கூல் படிக்கும் ஆண்களும் பெண்களும் பலவித நேரங்களில் தங்கள் தனிமையை ஸ்டேடஸாக போட்டும், தங்களது புகைப்படங்களை விதவிதமாக சேர் செய்தும் நிம்மதி அடைவதாக எண்ணி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

சரி  இவைகள்  மட்டுமானு  பாத்தா  வாங்குற ட்ரெஸ், நகைகள் முதல் கிச்சனுக்கு வாங்கும் சாமான் வரை அனைத்தும் போட்டோவாக. அத வச்சே  அவங்க சொத்து கணக்க குத்துமதிப்பா  கண்டுபிடிச்சிடலாம்,  நாம  எப்படி  பணக்காரன்  ஆகலாம் என்று  திருடர்கள் கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த இடத்தில் ஒரு படத்தின் காமெடி தான் நினைவுக்கு வருது..

“ஒரு வாரம் ஊருக்கு  போறோம், வீட்டை பாத்துக்கோங்கன்னு போலிஸ் ஸ்டேசனில் லட்டர் கொடுத்துட்டு போவார் ஒருவர், அவர் ஊரில் இருந்து வந்து பாத்தா மொத்த வீடும் காலியாக இருக்கும், வீட்டின் சொந்தக்காரர் நேரா போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து, “உங்களிடம் தானே வீட்டை பாத்துக்க சொன்னேன், நீங்களே திருடனா இருப்பீங்கன்னு நினைக்கல” என்று சண்டை போட இறுதியில் வீட்டிற்கு சென்று பார்த்தால் கதவில் அவர் ஸ்டேசனில் கொடுத்த லட்டரும் அதில் “தகவலுக்கு நன்னி” என்று எழுதப்பட்டிருக்கும்.  மேட்டர் என்னன்னா அவர் ஊருக்கு போறோம்னு தகவல் கொடுக்கும் நேரத்தில் ஸ்டேசனில் திருடனாக அமர்ந்திருக்கும் ஒருவன் நோட்டம் விட்டு திருடி விடுவான். இறுதியில் நன்றிக்கு பதில் நன்னி என்று சொல்லக் கூடிய அந்த வார்த்தையை வைத்து திருடன் பிடிபடுவான்.”

இன்று இந்தக் கதையா தான் இருக்கிறது சமூக வலைத்தளைங்களில் மக்களின் நிலவரமும்.

இப்படி நம் நிலைமையை வெளிப்படுத்துகிறோமே!!! இதெல்லாம் தேவை தானா??? இதனால் பிரச்சினை  எதுவும் வருமான்னு நாம்  சிந்தித்தது உண்டா!!!.

நிம்மதியை மற்றவர்களுக்கு  தெரிவிப்பதாக  எண்ணி, தனது  தனிமை  நிலையை பல திருடர்களுக்கும், கள்வர்களுக்கும் வெளிச்சம்  போட்டுக் காட்டுகிறோம்  என்பதை  மறக்கின்றோம் நம்மில் பலர்.

இப்போது  எல்லாம்  திருட  நினைக்கும்  திருடர்களுக்கு வீட்டை  உளவு பார்க்க உளவாளியோ, யாரும்  வராம  பாத்துக்கோன்னு  சொல்லி  கேட்டில் நிற்க வைக்க காவலாளியோ  தேவை  இல்லை.

ஒரு  கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் அக்கவுன்ட்  இருந்தாலே  போதும். தனக்கு தேவையான  தகவல்களை சொகுசாக இருந்த இடத்திலேயே பெற்று விடலாம் பலரின் ஸ்டேடஸ் மூலம்.

நண்பர்கள் என்ற போர்வையில் பல நாள் பேசி பழகி வீட்டு முகவரி, தொலைபேசி எண் என்று தனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சேமித்து, தக்க சூழலில் நமது சொந்த வாக்கு மூலத்தின் மூலமே  திருடர்களை வரவேற்கின்றோம் நம்மில் பலர். (இதுக்கு பேர்  தான்  சொந்த  காசில் சூனியமோ J ).



இன்னும் பலர்  நெருங்கி பழகி பல  இளம் பெண்களை/ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை, பணம், கற்பு என்று சூறையாடப்படுகிறது. மேலும் ஏமாற்றத்தில் தொடங்கி உயிரையே எடுக்கும் படுபயங்கரமான குற்றம் வரைக்கும் செல்கிறது இந்த சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு.



ஆனால் ஆபத்து நிறைந்த இதே சமூக வலைத்தளம் தான் சென்னை வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்த நேரத்திலும், பல நற்காரியங்களுக்கும் சரியான வகையில் பயன்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் உரியவருக்கு தேவையான உதவியை பெற்று தந்தது. பல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது, மக்களிடம் பரவச் செய்கிறது.

சமூக வலைத்தளைங்களை பயன்படுத்துவதில் தப்பில்லை, அதில் நண்பர்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்று நம்பி பல நம்பிக்கையான விசயங்களை பகிரும் முன் சற்று சிந்தியுங்கள்.  நட்பு என்ற போர்வையில் நம்மை சுற்றி பல வில்லன்கள் தான் நம்மிடம் நெருக்கத்தில் உள்ளார்கள் என்ற சந்தேகக் கண்ணோடு எப்பொழுது ஒரு படி விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

எந்த ஒரு விசயத்தையும் நாம் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அது நன்மையா தீமையா என்று உணர முடியும். 

கத்தியை வைத்து பழத்தையும் நறுக்கலாம், மனிதனின் உயிரையும் எடுக்கலாம். பயன்படுத்தும் விதமே முக்கியம்!!!

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன்


Comments

  1. ஹ்ம்ம் சரிதான் ,,,,

    பயன் உள்ள தகவல் ..அனைவர்க்கும்

    ReplyDelete
  2. நல்ல தகவல் ...

    ReplyDelete
  3. இதனை மேலோட்டமாக பார்த்து விட்டு விடாமல், ஆழ்ந்து யோசித்தல் வேண்டும்
    .
    இன்னும் பலர் நெருங்கி பழகி பல இளம் பெண்களை/ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை, பணம், கற்பு என்று சூறையாடப்படுகிறது. மேலும் ஏமாற்றத்தில் தொடங்கி உயிரையே எடுக்கும் படுபயங்கரமான குற்றம் வரைக்கும் செல்கிறது இந்த சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும், அவசியமான விழிப்புணர்வு பதிவு. சமூக தளங்களை வரைமுறையோடு அணுகுவதே சிறந்தது. எத்தனையோ சம்பவங்கள் இதனை நமக்கு உணர்த்துகின்றன. இது நாம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கக்கூடிய விசயம். அதிகப்பட்ச எச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்தது.

    சகோதரத்துவத்துடன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்.. அல்ஹம்துலில்லாஹ்.. ஜசக்கல்லாஹ் ஹைரன்..

      Delete
  5. இப்போதைய காலகட்டத்துக்கு அவசியமான பதிவு யாஸ்மின்...

    நம் வீட்டு விஷயங்களை, தனிநபர் பற்றிய சொந்த விஷயங்களை முடிந்த வரை பகிராமல் இருப்பது நலம்...

    ஆனா, எதாவது ஒரு ஸ்டேடஸ் தேத்தனுமென ஐந்து நிமிஷத்துக்கு ஒரு பதிவு, அதில் அவர்ளை பற்றிய எல்லா தகவலையும் வலிந்து வலிந்து கொட்டி கொட்டி கொடுப்பது...

    அதை லைக்க, ஷேர் பண்ண, ஊக்குவிக்க என ஒரு பெரும் நண்பர்கள் வட்டாரம்...

    பின்ன ஏன் இப்படி ஆட்கள் பெருக மாட்டாங்க...!

    எல்லாவற்றையும் கண்ணை மூடி ஊக்குவிக்கும் நண்பர்கள் தான் முதல் எதிரி...

    தன் தனிமையையும், எல்லா தகவல்களையும் தருபவர்கள் இவற்றை பார்த்து சிந்தித்தால் நலம்...

    ReplyDelete
  6. சலாம் யாஸ்
    அவசியமான பதிவு...

    இப்போதைய காலகட்டத்தில் சோசியல் மீடியாக்களில் எதையும் பகிரும் முன் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசிப்பது அவசியமானது.. நெருங்கிய நட்புகளுடன் மட்டும்தான் ஷேர் செய்கிறேன்.. செக்யூரிட்டி பிரச்சனை வர வாய்ப்பில்லை என அசால்ட்டாக இருந்து விட முடியாது.. இங்கு சோஷியல் மீடியாக்களில் எதுவும் சீக்ரட் கிடையாது என்பதை உணர்ந்த்து விவேகமாக செயல்பட வேண்டும்..!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்