கல்வியா (ஆ???)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஒருவரை பண்படுத்தக் கூடிய கல்வி என்பது இன்று எட்டாக்கனியாக மாறி வருகிறது என்றால் மிகையாகாது. கல்வி என்றாலே மார்க்கட்டுகளில் கிடைக்கக் கூடிய விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று போல் ஆகி வருகிறது.

“கல்வி” என்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பை பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவரும் எடுத்தாளும் தலைப்பாக இருக்கிறது, இதை பற்றி அவர்கள் மனதில் தோன்றியதை கட்டுரைகளாக, பட்டிமன்றமாக, குறும்படமாக இயக்கி இந்த சமூகத்தில் உலாவர செய்துள்ளனர். அப்படி செய்தும் ஏன் அது இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை, ஏன் என்று சற்றே சிந்திப்போமாக!!!

கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஒரு சான்று..

நபி ஸல் அவர்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை காண விரும்பிய போது, நபி ஸல் அந்த இளைஞர்களுக்கு விதித்த முதல் கட்டளை,

'நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள். 
அறிவிப்பவர்: அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) - ஸஹீஹ் புகாரி: 6008

அன்று முதல் இன்று வரை அறிவியல் வளர்ச்சி என்பது உயர்ந்தே செல்கிறது, இந்த வளர்ச்சியை எற்படுத்த தேவை என்பது கல்வியா? செல்வமா? என்று உங்களை கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆனால் நான் கல்விதான் என்று சொல்வேன். அப்படியானால் அறிவியலோடு கல்வியும் வளர்ந்து தானே செல்லவேண்டும்,  ஆனால் மாறாக கல்வியின் தரம் குறைந்தே செல்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே சென்றால் இந்த கல்வி அழிந்து விடும் அபாயம் ஏற்ப்பட்டாலும்  ஆச்சர்யப் படுவதற்கில்லை.

இந்த அறிவியலால் மனிதவளமோ அல்லது மனிதனுக்கு வளமோ கூடுனால், அவன் இந்த கல்வியின் வளத்தை உயர்த்துவான், அவ்வாறு செய்யவில்லை என்றாலும் அதற்காக அவன் பாடுபடுவான். இன்றைய அறிவியலால் மனிதன் அழிந்து போகிறான். அதனால் தான் கல்வியும் அழிந்து போகிறது.

நமது மறைந்த முன்னால் குடியரசு தலைவர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள், இந்த உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் எப்படி? அவர்கள் “கல்வி கற்பது அறிவை பெருக்குவதற்கும், அதனைக்கொண்டு மனிதவளத்தையும், மனிதனுக்கு வளத்தையும் பெருக்க வேண்டும்” என்று நினைத்தார்கள். அவ்வாறு வாழ்ந்தமையால் அவர்கள் இந்த உலகை பொருளாதாரத்திற்காக சுற்ற வில்லை, மாறாக அவர்களை இந்த உலகமே சுற்றிவந்தது.

அன்று நம் நாட்டில் இருந்த தலைவர்கள், மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும், அவர்கள் அறிவின்மை நீங்கி அறிவுள்ள மனிதர்களாக வாழவேண்டும் என்று தன்னுடைய பொருளாதாரத்தையே தானம் செய்தவர்கள். தற்போது உள்ள  நிலை என்னவென்றால் பொருளாதாரத்திற்கு தான் கல்வி. இன்று உள்ள அனேக மக்களின் சிந்தனையும், கல்வி கற்று, அதிக சம்பளத்தில் பணியில் அமர்ந்து  சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றத்தை கண்ட பண முதலைகள் இந்த கல்வியை பொருளாதாரத்திற்கு, விற்கும் கொள்கைக்கு மாறிவிட்டனர். 

இது போன்ற சில பண முதலைகள் விற்ற இந்த கல்வியை கற்றுக்கொண்டு, இல்லை இல்லை வாங்கிக்கொண்டு அதை வைத்து பணத்தை சம்பாரிக்க வேண்டும் என்று அகன்ற இந்த பூமியில் அங்கும் இங்குமாக நாம் ஓடும் ஓட்டம், இந்த பூமி சுற்றும் வேகத்தை விட பலமடங்கு அதிகமாக உள்ளது.

இதில் எவ்விலை கொடுத்தேனும் வெற்றி பெறும் மேல் வர்க்க மக்களுக்கு முன் கூனி குறுகி இந்த போட்டியில் தோற்று போவது கீழ் வர்க்க மக்களே. இப்போட்டியில் அவர்கள் மரணித்தும் விடுகின்றனர். 

அந்த சமபவத்தில் ஒன்று தான் தற்போது விழுப்புரத்தில், சித்த மருத்துவக்கல்லூரியில் நடந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மாணவிகளின் மரணம்.

பெற்றோர்களும் காரணம்:

இந்த நிலைக்கு முதல் காரணம் நம்மை போன்றவர்கள் தான். காரணம் அனைத்து பெற்றோரும் தங்களின் பிள்ளைச் செல்வங்களை, நன்கு படிக்க வைத்து, கை நிறைய பணம் சம்பாதித்து, சுகபோக, ஒரு செல்வந்தர் வாழ்க்கை வாழவேண்டும் என்று மட்டும் தான் நினைக்கின்றீகள். யாரேனும் தன்னுடைய பிள்ளைகள் நன்கு கல்வி கற்று, தனக்கு பின் வரும் இந்த சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்றோமா??. பின்பு எப்படி கல்வியால் இந்த சமூகம் சிறக்கும், மாறாக சீர் குலைந்து தான் போகும்.

கல்வி ஒரு வியாபாரம்:

இந்த நிலைக்கு இரண்டாவது காரணம் செல்வந்தர்கள், பணத்தாசை பிடித்த இந்த மிருகங்கள், தன்னுடைய பசிக்கு உணவாக பணத்தை மட்டும் உண்டால் பரவாக இல்லை, அதற்கு பதிலாக கீழ் வர்க்க மக்களின் உயிரையும் சேர்த்து தான் உண்ணுகின்றனர்.

இன்று வரை நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை கணக்கெடுத்தால் பல ஆயிரத்துக்கு மேல் போகும். இந்த கல்வி நிறுவனர்கள் யாரேனும் ஏழ்மை நிலையில் உள்ளனர்களா?? என்று பார்த்தோமேயானால், யாரும் அப்படி இல்லை. மற்றொரு கோணத்தில் இருந்து பார்ப்போம்மேயானால் அவர்கள் பிடுங்கும் கட்டணத்திற்கு ஏற்றாற்போல் தரமான கல்வியையாவது கொடுக்கிறார்களா?? என்றால் இல்லவே இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் அவர்களின் செல்வங்கள் தான் ஏற்றம் அடைகிறது. இந்த கீழ் வர்க்க மக்களின் செல்வங்கள் குறைந்து கொண்டே செல்கிறது, அதன் பின்பு தன்னிடம் இருந்து குறைந்த செல்வத்தை மீட்டெடுக்க அந்த மக்கள் மிகுந்த போராட்டத்தை எதிர் நோக்கி பயணிக்கின்றார்கள், அதிலும் தோற்கும் நிலைமை வரும்போது, இந்த சமூக நலனிற்கு எதிராக மாறுகின்றனர். இதற்கு அவர்களை  நாம்  குற்றம்  சொல்ல முடியாது.

அரசாங்கம்:

இதில் மூன்றாவது காரணியாக இருப்பது அரசுதான். எந்த கோணத்திலும் இருந்து பார்த்தாலும் இந்த அரசாங்கம்தான் குற்றவாளியாக இருக்கிறது. இந்த குற்றங்களை தடுத்து களையவேண்டிய பொறுப்பு அரசிற்கு உண்டு, ஆனால் அரசாங்கம் குற்றம் செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறது, கண்டுகொள்வதில்லை. குற்றம் செய்பவர்களை விட அந்த குற்றங்களை செய்ய பக்க பலமாக இருந்து அவர்களை காத்து நிற்பவர்களே முதல் குற்றவாளிகள். அரசாங்கத்திற்கு ஏன் இந்த அவல நிலை?? ஏன் என்று பார்த்தால் அப்படிப்பட்ட அதிகாரம் நிறைந்த பணிகளில்,  ஊழலில்  ஊறித் திளைத்த சில  அரசியல்வாதிகளும், மேல் வர்க்க மக்களுமே நிலைத்து நிற்கின்றனர்.

அரசாங்க வேலைகளில் உள்ளவர்களும், அரசாங்க ஆசிரியராக பணி புரிபவர்களும் தங்களின் பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கின்றனர். அடிப்படை வசதி வாய்ப்புக் கூட இல்லாத அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதில்லை, அப்படி சேர்த்தாலும் அடிப்படை வசதியற்ற பள்ளிகளில் படிக்க பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. இருப்பினும் ஏழ்மையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை அரசு கல்வி நிறுவனத்திற்கு அனுப்பும் பெறோர்கள் மற்றும் பிள்ளைகளின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும்மா? இதிலும் ஒரு மாணவிக்கு அநீதி, கொடுமை நிகழ்ந்துள்ளது. 

ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..!

திருச்சி துறையூரில் ஒரு அரசுப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் பயின்று வரும் மாணவி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிபபெண் வாங்க வேண்டும் என்று இரவு பகலாக படித்து தேர்வு எழுதினார். ஆனால் தேர்வு முடிவை பார்த்ததும் அதிர்ந்து போனார், தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண்கள், தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அறிவியலில் மட்டும் 2 மதிப்பெண் எப்படி எடுக்க சாத்தியம் என்று பார்த்தால், அரசு  அதிகாரிகளின் அலட்சிய போக்கும், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமையுமே. விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய முனைந்த மாணவிக்கு எந்த பதிலும் இல்லை, அதனையும் கேட்க சென்றவருக்கு மிரட்டல், தான் உடல்நிலை சரியில்லாததால்  எடுத்துக் கொண்ட  மாத்திரையின்  வீரியம் என்னை பரீட்சையை எழுத விடவில்லை, சுய நினைவற்று இருந்தேன் என்று ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டு தர மிரட்டியுள்ளனர்.

வசதியற்ற அந்த பெண்ணும் போராட தெம்பில்லாமல் அவ்வாறே செய்துள்ளார். மீண்டும் மறு தேர்வு எழுதி அவர் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா??? 93 . என்ன மதிப்பெண் எடுத்தும் என்ன பயன், அவர் தோல்வியுற்று வெற்றி பெற்றவர் என்ற கரும்புள்ளியை யாரால் போக்க முடியும்

ரோஹித், சரண்யா, பிரியங்கா, மோனிஷா மரணத்தை தொடர்ந்து நாடெங்கும் பல மரணங்களும், அநியாயங்களும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இரண்டு நாட்கள் அதைப் பற்றி சிந்தித்து அதைக் கடந்து அடுத்த வேலையை பார்ப்பதே இன்று நம்மில் பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு. ஒரு சமுதாயத்தை திருத்த நம்மில் இருந்தே முயற்சியை தொடங்க வேண்டும் என்பதை நம்மில் அனைவரும் மறக்கின்றோம், மறுக்கின்றோம்.
மனித இனத்தை பண்படுத்த கூடிய இந்த கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசையும், ஜாதி பேதம் அற்ற கல்வி நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்களால் மட்டுமே தனக்கு கீழ் நடக்கும் குற்றங்களை களைந்து அவற்றை சீர் செய்ய முடியும். மக்களே, நீங்கள் சிந்தித்து செயல்பட இதுவே சரியான தருணம்.

உங்கள் சகோதரன்,
ரியாஸ்தீன் யாஸ்மின்




Comments

  1. நல்ல பதிவு, இன்றைய கல்வி சூழ்நிலைய உதாரணங்களோடு அருமை. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. தொடந்து எழுதுங்க. வாசிப்(பேன்)போம் இன் ஷா அல்லாஹ்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை - எதையோ தொட்டு தொடர்ந்து, சமுதாய அவலத்தை தோலுரித்து காட்டியுள்ளது

    ReplyDelete
  3. அரசு அரசு அரசு தான் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும்
    .
    மக்கள் சரியான அரசினை தேர்ந்தெடுக்க வேண்டும்
    .
    கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு நமக்குள் வரவேண்டும். அப்பொழுது தான் நமது சிந்தனை சீர் பெறக்கூடும் - இத வரக்கூடாது என்ற எதிர்மறையை நேர்மறை எண்ணம் கொண்டே தகர்த்தல் வேண்டும்.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ், முதல் கட்டுரையே நல்ல கட்டுரை சகோதரர். இன்னும் சில தகவல்களை ஆராய்ந்து, ஆய்வாக வெளியிட்டிருக்கலாம். எப்படியிருப்பினும், இந்தக் கல்வியின் தரத்தைப் பற்றி எவ்வளவு போதித்தாலும் உணர்கின்ற நிலையில் பெற்றோர் இல்லை என்பதே உண்மை. அவர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கல்வித் திட்டத்திலிருந்து, புகழ் பெற்ற பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொண்டால் எங்கே எதிர்காலத்தில் தாம் வீணர்களாகி விடுவோமோ என்றே அஞ்சுகின்றனர். அதனாலேயே இதே செக்குக்கு எல்லோரும் தம்மைப் பிழிய முன்வருகின்றனர். கல்வி என்னும் பெயரில் நடக்கும் அராஜகம் கட்டாயம் சீர்திருத்தப்பட வேண்டிய சூழ்நிலையில்தான் வாழ்கிறோம் என்றால் அது மிகையில்லை. இன்னும் நிறைய எழுதுங்கள் சகோதரர்.

    வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரியாஸ்தீன், இறைவனின் வழியில் கல்வியை அடுத்தவருக்கு கொண்டு செல்பவரை கண்டு பொறாமைப் படலாம் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). அப்படியான கல்வி இன்று நம்மிடம் படும் பாட்டை எண்ணி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நிதர்சனமான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்க...

    சகோதரத்துவத்துடன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. // சகோதரன்,
    ரியாஸ்தீன் யாஸ்மின்/

    இது எப்போலருந்து? ட்ரெயினிங் யாஸ்மினா? குருவை மிஞ்சிய சிஷ்யர்!!

    ReplyDelete
    Replies
    1. :) இப்போதான் துவக்கம்.. இன்ஷா அல்லாஹ்.. உங்கள் வாக்கு பலித்து குருவை மிஞ்சும் சிஷ்யர் ஆகட்டும்..

      Delete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்