உயிர் கொல்லும் வட்டிக்கு தடை – அன்றே விதித்தது இஸ்லாம்

கடந்த இரண்டு தினங்களாக பரப்பராக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம், பலரின் தூக்கத்தை பறித்த ஒரு விசயம், ஏன் பலரின் மனிதாபிமானத்தை அடி ஆழம் வரை சென்று உலுக்கிய விசயம் என்னவெனில், நெல்லையில் ஒரு குடும்பமே எரிந்து சாம்பலானது பற்றியே.. கந்துவட்டி கொடுமையால், அசலுக்கு மேல் வட்டி செலுத்தியும் தனது கடனில் இருந்து மீள முடியாமல் பலத்த அவமானங்களுக்கு பிறகு, பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்பும் தீர்வு வராத பட்சத்தில், தீர்வுக்காக போராடிய அதே கலெக்டர் அலுவலகம் முன்பு கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு வயதே ஆனா பச்சிளம் பாலகன், ஐந்து வயது மகள், மனைவி என்று தனது குடும்பத்திற்கு தானே தீ வைத்து எரித்து, எரித்துக் கொண்ட சம்பவம் பார்ப்பவரையும், கேட்பவரையும் இன்று தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. ஒருவருக்கு பொருளாதாரம் என்பது அத்தியாவசியமானதே, தனது தேவைக்கேற்ற வருமானம் இல்லை எனும்போது விரும்பியே விரும்பாமலோ கடன் படும் சூழலுக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர். ஆனால் வாழ்வதற்காக வாங்கும் கடன் நம் உயிரையே மாய்க்கும் என்று ஒருவரும் தெரிந்தே வாங்குவதில்லை. அதிலும் பெரும்பான்மையான மக்கள் ப...