கறுப்பு பணம் – கறுப்பு தினம் – நவம்பர் 8

ஆம் நவம்பர் 8, மறக்கமுடியுமா.. பல கோடி மக்களின் வயிற்றில் அடித்த தினம், அடிமட்ட மக்களை ஆட்டிப்படைத்த தினம். இதே நாள், கடந்த வருடம் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த தினம். ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று இருமாப்பு கொண்டோரின் இதயத்தையும் ஆட்டுவித்த தினம். கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன், புதிய இந்தியாவை பிறப்பிக்கிறேன் என்று எவ்வித முன்னேற்ப்பாடும் இல்லாமல் பண முதலைகளின், பணத்தை காக்க இருட்டடிப்பு செய்த தினம். சாமானிய மக்களின் வாழ்வை சாகச வாழ்வாக மாற்றிய தினம். மறக்க முடியுமா?? தன் உழைப்பில் உருவான சேமிப்பைக் கூட அடுத்தவர் கட்டளையின் படி தான் செலவழிக்க முடியும் என்று இக்கட்டான சூழலுக்கு தள்ளிய தினம். “எங்களிடம் தாருங்கள், உங்கள் பணத்தை பாதுகாக்கிறோம். பாதுகாக்க கூலியை நீங்கள் தர வேண்டாம், வட்டியாக நாங்கள் தருகிறோம் என்று கூவி அழைத்து, சேமிப்பை கணக்கை துவங்க வைத்த வங்கிகளெல்லாம், “ 2000 தான் தர முடியும், நீ எம்புட்டு வச்சு இருந்தா என்ன, நாளைக்கு வா என்று நம் பணத்தை வைத்தே நம் சுயமரியாதையை ஏளனம் செய்த தினம்”. வேலைக்கு செல்ல இயலாமல், அன்றாடம் சம்பாதிக்கும் தினக் கூ...