~~~~ சினிமாவும் வில்லத்தனமும் ~~~

அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... எனக்கு சின்ன வயதில் நடந்த பெரும்பான்மையான விசயங்கள் நினைவில் நிற்பதில்லை. அது எனக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. இது நிறைய பேரிடத்தில் உள்ளது. ஆனால் அதையும் மீறி நம் வாழ்வில் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள் நம் மரணம் வரை நம் மனதின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து, தருணம் பார்த்து எட்டி பாக்கும். அப்படித்தான் இதுவும். நான் அப்போ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அஞ்சாம் வகுப்பு வரை உள்ள ஒரு ஸ்கூலில் இருந்து அப்போ தான் ஹை ஸ்கூலுக்கு மாறினேன். இந்த சின்ன ஸ்கூல்ல இருந்து ஹை ஸ்கூலுக்கு போறோம்னு அந்த வயசுலேயே பெரிய படிப்பு படிக்க போறாப்ள மனதுக்குள் ஏதோ பயங்கர சந்தோசம், பட் பதட்டம். ஏன்னா புது ஸ்கூல், புது ஆட்கள், புது ஆசிரியர்கள், புது இடம் என்று எல்லாம் ஒரு வித பயத்தை கொடுத்தது.. நான் நினைச்ச மாதிரியே எல்லாம் புது புது முகங்கள், முதல் வரிசையில் உக்கார ஒரே அடி தடி.. ஏன்னா அது கேர்ல்ஸ் ஒன்லி ஸ்கூல்.. பெண்களுக்குள் எப்பவும் போட்டி இருக்கத்தானே செய்யும். அப்படி அடிச்சு பிடிச்சு ம...