மனிதர்கள் நன்றி கெட்டவர்களே!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)...

ஆம்! அனேக நேரங்களில் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். இது  யாரும் மறுக்க இயலாத உண்மை.

இவ்வுலகில் நாம் எதிர் பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நடப்பதில்லை, ஆனால் எதிர் பார்க்காத, நாம் கேட்காத எத்தனையோ நல்ல விசயங்களும் நம் வாழ்வில் நடை பெறவே செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்..

அப்படி நடக்கும் பொழுது நாம் சந்தோஷ மிகுதியிலும், உற்சாகத்திலும் அதை யாரிடம் சொல்வது, எப்படி சந்தோசத்தை இரட்டிப்பாக்குவது என்று சிந்திக்கிறோமே தவிர அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கவே செய்கிறோம். இது அனைவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு தருணங்களிலாவது நடைபெறவே செய்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டியுள்ளது. இதில் சிலர் விதி விலக்காக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வுலகை பரிபாலித்து, நம் தேவையை தகுத்த நேரத்தில் தகுந்த இடத்தில் பூர்த்தி செய்யும் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கும் நாம்,  நமக்கு தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ, நண்பர்களோ,  நம் அலுவலகத்தில் உள்ளவர்களோ நமக்கு சிறு உதவி செய்தாலும் மறக்காமல் அதற்கு “நன்றி” என்று ஒரு பதிலை கூறுகிறோம். காரணம் அவர் நம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவேவும், நம் மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும். ஆனால் அந்த உதவியை அவர் மூலம் கிடைக்கச் செய்ததது இறைவன் தான் என்பதை அந்த முதல் நொடியில் எத்தனை பேர் நம்மில் நினைவு கூறுகிறோம், அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உண்மையாகவே அவர் தான் முழு மூச்சாக அந்த வெற்றிக்கு காரணம் என்றே  சிந்திக்கின்றோம்.

(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 14:34)

மனிதன் என்பவன் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதேனும் தேவையுடையவனாகவே படைக்கப்பட்டுள்ளான். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நல்ல வேலை, பணம், குழந்தை செல்வம், சிறந்த வாழ்க்கை துணை, ஆரோக்கியமான உடல்நிலை என்று எதோ ஒன்றை தேடிக் கொண்டே அலைகிறான்.

எடுத்துக் காட்டாக ஒரு பெண் தனக்கு கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் மற்றவர்களுக்கு எளிதாக கிடைத்த குழந்தை பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறாள், என்ன சாபமோ, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை, நான் என்ன பாவம் செய்தேன், அதை எப்படி சரி செய்வது என்று இருபத்தி நாளு மணி நேரம் அதே சிந்தனை, பல பேரிடம் ஆலோசனை என்று தன்னை சரி படுத்திக் கொள்ள இறைவன் வழியில் தன்னை உட்படுத்திக் கொள்ள தன்னால் இயன்ற அளவு முயல்கிறாள்.

அதற்காக இறைவனை அதிகமதிகம் தொழுவது, தொழுகையின் நேரங்களை கடைபிடிப்பது, நோன்பு பிடிப்பது,  தஹஜ்ஜத் தொழுவது, இஃதிகாஃப்  இருப்பது,  திக்ர் செய்வது, குர்-ஆன் ஓதுவது, ஜக்காத் கொடுப்பது என்று அல்லாஹ்விற்கு விருப்பமான அனைத்து செயல்களையும் செய்கிறாள். தன்னை முழுதாக இறைவனிடம் அற்பணிக்கிறாள்.
ஒரு வழியாக தான் நினைத்தது ஒரு கட்டத்தில் அடையவும் செய்கிறாள். ஆனால் வாழ்க்கையில் முக்கியாமனது, தேவையானது என்று நினைத்த ஒன்றை வழங்கிய இறைவனை நினைவுக் கூர்ந்து நன்றி செலுத்துகிறோமோ என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் பதில்.

ஆனால் அப்படி தவமிருந்து கிடைக்கப்பெற்ற செல்வம் நமக்கு மிகுந்த சோதனையாகும் என்று நாம் சிந்தித்து பார்த்தது உண்டா???

அந்த செல்வமே இப்படிப்பட்ட அருளை வழங்கிய வல்லவனுடான தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்துக் கொள்ள வழி வகுக்கும் என்று எதிர்பார்த்தது உண்டா??

நினைத்தது அடைந்தவுடன், ஐந்து வேலை தொழுகை நான்காக, மூன்றாக, இரண்டாக, ஒன்றாக குறைந்து குறைந்து சில நேரங்களில் முற்றும் இல்லாமல் போகும் நிலையும் வருகிறது.  கட்டாய கடமையான ஐவேலை தொழுகையே இழக்கும் போது பின் தஹஜ்ஜத் எங்கே தொழுவது???

அடுத்து ஐந்து வேலை தொழுகையில் குர்-ஆன் ஓதுவது என்பது போய் இரண்டு நாளுக்கு ஒருமுறை என்று தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மாதமிரு முறை போய், மாதம் ஒருமுறை மாறி இறுதியில் ரமலானில் குர்-ஆனை தூசு தட்டும் நிலையும் வருகிறது.
இப்படி அனைத்திலும் கவனமற்று சைத்தானின் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக பயணிக்க தொடங்குகிறோம்.

கேட்டால் நாம் சொல்லும் ஒரே காரணம், “குழந்தைய வச்சுக்கிட்டு எங்கப்பா இதெல்லாம் செய்ய முடிகிறது” என்று  அசால்ட்டாக ஒரு பதில். 

அவனை வணங்காது, நினைவுக் கூறாது இருப்பதற்கு அவன் வழங்கியே அருட்கொடை மீதே பழி போடுகிறோம்.

நிரந்தரமல்லாத இவ்வுலகில் கிடைக்கும் நிரந்தரமற்றவைகளுக்காக நேரத்தை செலவழிக்கும் நாம், மறுமை வாழ்விற்காக சிந்திக்க தவறி விடுகிறோம். நமது சிறு சிறு நற்செயல்களிலும் கூட நன்மைகளை சேர்க்க விட்டு விடுகிறோம். இறைவனின் பொருத்தத்தை அடைய மறந்து விடுகிறோம்.

இது போன்ற எத்தனை எத்தனையோ விசயங்களில் இந்த சம்பவத்தை நம் வாழ்வில் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

நம் வாழ்கையில் ஒன்று தேவைப்படும் போது உருகி உருகி தொழுவதும், இறைவனை நினைவுக் கூர்வதுமாக, நன்றி செலுத்தியவராக இருக்கிறோம். ஆனால் அதுவே கிடைத்து விட்டால் நம் அடுத்த வேலையை நோக்கி ஓடுகிறோம் இறைவனை ஒரு நொடி பொழுதேனும் சிந்திக்க நேரமில்லாமல்.

சிந்திக்க:-

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!  (அல் குர்-ஆன் 2:155)

ஆம் சிலருக்கு அதிகம் கொடுத்தும், சிலருக்கு உள்ளதை எடுத்தும் சோதிக்கின்றான்.

தேவைப்பட்ட ஒன்று கிடைத்துவிட்டால் சோதனை தீர்ந்தது என்று சிந்திப்பது முட்டாள் தனம். அதன் பிறகு தான் நமக்கு உண்மையான சோதனையே ஆரம்பம் ஆகிறது.

இத்தனை நாட்கள் கொடுக்காமல் சோதித்த இறைவன் இப்பொழுது கொடுத்து சோதிக்கின்றான் அவ்வளவே வித்தியாசம். ஒன்றே தேடும்போது, விரும்பும்போது அது கிடைப்பதற்க்காக அதிகமதிகம் இறைவனை நினைவுக் கூர்ந்து நன்றி செலுத்தும் நாம், அதனைப் பெற்ற பின் சோதனை தீர்ந்ததது என்றெண்ணி அவனை நினைவுக் கூறவும், நன்றி செலுத்தவும் மறக்கிறோம், விலகி போகிறோம். இதுவே இவ்வுலகில் அனேக மனிதர்களின் நிலையாக உள்ளது.

இன்னும் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று, நம்மிடம் ஒன்று இல்லாத வரை நாளை மறுமையில் அதை பற்றிய கேள்வி கணக்கிலிருந்து நாம் தப்பித்து விடுகிறோம். ஆனால் அதனை பெற்ற பின் அதற்கு நாமே பொறுப்புதாரிகள், நம் பொறுப்பின் எண்ணிக்கை கூடும் பொழுது நம்முடைய கேள்வியின் கணக்கும் அதிகம் ஆகிறது.

அவன் செய்யும் அனைத்து செயல்களிலும் நன்மை உண்டாகும் என்று சிந்திப்பவர்களையும்,, இதுவரை நம் வாழ்வில் கிடைத்துள்ள எத்தனையோ அருட் கொடைகளுக்கு நன்றி கூறிக் கொண்டு இருப்பவர்களையும், எந்நிலையிலும் நன்றி செலுத்துபவர்களுமே சிறந்த நல்லடியார்களுக்கு உதாரணம் ஆவார்கள்.


சோகமான சோதனை காலமானாலும் சரி,  சந்தோசமான தருணமானாலும் சரி, எந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுக் கூர்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல் குர்-ஆன் 2:207)


நமக்கு தேவையான ஒரு பிடி சோறாகாட்டும், ஒரு கோடி பணமாகட்டும் அது கிடைக்கச் செய்வது இறைவன் என்பதை நாம் ஒவ்வொரு நொடியிலும் நினைவுக் கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தி பழகுவோமாக!!! இன்ஷா அல்லாஹ்!!!

Comments

  1. // நம் வாழ்கையில் ஒன்று தேவைப்படும் போது உருகி உருகி தொழுவதும், இறைவனை நினைவுக் கூர்வதுமாக, நன்றி செலுத்தியவராக இருக்கிறோம். ஆனால் அதுவே கிடைத்து விட்டால் நம் அடுத்த வேலையை நோக்கி ஓடுகிறோம் இறைவனை ஒரு நொடி பொழுதேனும் சிந்திக்க நேரமில்லாமல்.//

    உண்மை தான்.... இதை நிச்சயம் நான்/நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.. இந்த நிலையில் இருந்து இறைவன் நம்மை பாதுகாக்க வேண்டும்...

    அனதர் குட் ஒன்.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      //உண்மை தான்.... இதை நிச்சயம் நான்/நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.. இந்த நிலையில் இருந்து இறைவன் நம்மை பாதுகாக்க வேண்டும்..//

      ஆமின்..

      ஜசக்கல்லாஹ் ஹைரன்..

      Delete
  2. பாண்ட் சைஸ், அலைன்மென்ட், கலரிங் எல்லாம் பர்பெக்ட்.... கண்ண உறுத்தாம சூப்பரா இருக்கு... கீப் அப் த குட் வொர்க்...

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ்..

      //கீப் அப் த குட் வொர்க்...//

      உங்கள் அனைவரின் ஆதரவிலும் இன்ஷா அல்லாஹ்..

      Delete
  3. Masha Allah. Good post! Well done.

    "இறைவன் கொடுத்த அருள்கொடைகளுக்கு / அருளுக்கு மனிதன் நன்றி செலுத்தும்போது இறைவன் அதனை இரட்டிப்பக்கிறான்." என்று சொல்கிறது வேதம். அதனை நாம் பின்பற்றுவோமாக.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்திற்கு நன்றி ப்ரோ. ரபீக்.

      //"இறைவன் கொடுத்த அருள்கொடைகளுக்கு / அருளுக்கு மனிதன் நன்றி செலுத்தும்போது இறைவன் அதனை இரட்டிப்பக்கிறான்." என்று சொல்கிறது வேதம். அதனை நாம் பின்பற்றுவோமாக.//

      இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் உதவி புரிவானாக!!!

      Delete
  4. மாஷா அல்லாஹ் சிந்திக்க தூண்டும் சிறப்பான பதிவு.

    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக சகோ.

    ReplyDelete
  5. அருமை.., சிந்திக்க தூண்டும் சிறப்பான பதிவு
    இன்னும் இதுபோல் நிறைய பதிவுகள் போடுவதற்கு அல்லாஹு துணை செய்வானாக.. ஆமீன்..

    ReplyDelete
  6. Masha Allah ...Nice Post.... Keep up the good work...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்