~~~~ சினிமாவும் வில்லத்தனமும் ~~~


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)...

எனக்கு சின்ன வயதில் நடந்த பெரும்பான்மையான விசயங்கள் நினைவில் நிற்பதில்லை. அது எனக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. இது நிறைய பேரிடத்தில் உள்ளது. ஆனால் அதையும் மீறி நம் வாழ்வில் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள் நம் மரணம் வரை நம் மனதின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து, தருணம் பார்த்து எட்டி பாக்கும். அப்படித்தான் இதுவும்.

நான் அப்போ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அஞ்சாம் வகுப்பு வரை உள்ள ஒரு ஸ்கூலில் இருந்து அப்போ தான் ஹை ஸ்கூலுக்கு மாறினேன்.

இந்த சின்ன ஸ்கூல்ல இருந்து ஹை ஸ்கூலுக்கு போறோம்னு அந்த வயசுலேயே பெரிய படிப்பு படிக்க போறாப்ள மனதுக்குள் ஏதோ பயங்கர சந்தோசம், பட் பதட்டம். ஏன்னா புது ஸ்கூல், புது ஆட்கள், புது ஆசிரியர்கள், புது இடம் என்று எல்லாம் ஒரு வித பயத்தை கொடுத்தது..

நான் நினைச்ச மாதிரியே எல்லாம் புது புது முகங்கள், முதல் வரிசையில் உக்கார ஒரே அடி தடி.. ஏன்னா அது கேர்ல்ஸ் ஒன்லி ஸ்கூல்.. பெண்களுக்குள் எப்பவும் போட்டி இருக்கத்தானே செய்யும்.

அப்படி அடிச்சு பிடிச்சு முதல் வரிசையில் அமர்ந்த போது எனக்கு அருகில் ஒரு பெண், அப்போது நான் சிந்திக்கவில்லை அவள் என் உற்ற தோழியாவாள் என்று. அவள் பெயர் கவி, ஹிந்து பெண்.

காலம் செல்ல செல்ல இருவரும் ஒட்டி பிறந்த இரட்டை பிள்ளைகள் போல் வெகு நெருக்கமாக ஆகிவிட்டோம். தோழியுடன் அடிக்கடி சண்டைகளும், அதைவிட சந்தோசமும் நிறைந்து இருந்தது என் பள்ளி பருவம். காரணம் அவளது வீடும் என் வீடும் மிக மிக அருகில். பள்ளி முடிந்த பின்னும் இருவரும் பிரியாமல் சேர்ந்தே இருப்போம். நான் அவள் வீட்டில், அல்லது அவள் என் வீட்டில்.

இப்படியாக அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை என்று நாட்கள் நீடித்துக் கொண்டே போனது.

நான் அவள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவள் பெற்றோர் என்னை ஒரு விதமாகவே பார்க்க தொடங்கினர். ரொம்பவே தாழ்த்தி பேசுவதும், அவர்கள் மகளை தூக்கி வைத்து பேசுவதுமாக தொடர்ந்தது. ஆனால் அவர்கள் செலுத்தும் சிறு சிறு அக்கறை என் கண்ணில் பட்டதே தவிர, அவர்கள் இப்படி பேசுவதை புரிந்துக் கொள்ளும் தன்மை என்னிடத்தில் இல்லை.. காரணம் நான் அப்போ ரொம்ப சின்ன பொண்ணு. அவங்க உள் குத்தா பேசுறது அப்போது எனக்கு புடிபடல..

இப்படித்தான் ஒரு நாள் நான் அவள் வீட்டுக்கு போகும் போது அவளுடைய அப்பா பயங்கர கடுப்பில் இருந்தார். என்னிடம் ஒரு மாதிரி எரிஞ்சு எரிஞ்சு விழுந்தார். ஏன் இன்னைக்கு இப்படி இருக்கார் என்று என் தோழியிடம் கேட்டேன், இன்றைக்கு ஒரு படம் பார்த்தோம். அதில் ஒரு முஸ்லிம் தீவிரவாதி பல பேரை குண்டு வச்சு கொல்லும்படியான காட்சியைக் கண்டு அவர் முஸ்லிம்கள் மீது பயங்கர வெறுப்புடனும், கோபத்துடனும் இருக்கார் என்றாள்.

எனக்கு ஒரு புறம் சிரிப்பு, மறு புறம் என்னுள் ஆயிரம் கேள்விகள். இப்படியே நாட்கள் நகர நகர, என்னைக் கண்டாலே இதோ தீவிரவாதி கூட்டம் வருது என்று சொல்லும் அளவிற்கும், என்னை தீவிரவாதி என்று நேரடியாக அழைக்கும் அளவில் அவர் மனது முஸ்லிம்கள் மீது வெறுப்பை கொண்டு இருந்தது.

நான் அவள் வீட்டுக்கு போகும் போது அவர் கடுப்பாகவும், என்னை வெறுப்பாகவும் பார்த்தால் இன்னைக்கு எதோ படம் பாத்து இருக்கார் அதில் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சி வந்து இருக்கும்னு நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அவர் என்னை அவ்வாறு அழைப்பதும், வெறுப்பாக நடப்பதும் என் மனதை ரொம்பவே பாதித்தது. அந்த வயதில் எனக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லும் அளவில் அறிவு இல்லை என்றாலும், என் அறிவுக்கு எட்டியதை நான் பேசவே செய்தேன்.

“இது ஒரு திரைப்படம் மட்டுமே, உண்மை அல்ல. இதில் வரும் அனைத்து கருத்துகளும், காட்சிகளும் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஒரு சித்தரித்த காட்சிகளே.

சினிமாத்துறை வளர்ந்த காலம் முதல் அதிக அதிக திரை படங்களில் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகள், தீவிரவாதிகள் என்று சித்தரித்தது இன்று உங்களை இந்த அளவிற்கு பாதித்து இருக்கிறது.

இன்னும் எத்தனை படங்களில் இந்து மத பேரை வைத்தவர்களும், கிறிஸ்டியன் பேரை வைத்தவர்களும் தீவிரவாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் காண்பிக்க படுகின்றனர். அப்படி எனில் உங்கள் மதத்தின் மீதும், உங்கள் மத மக்கள் மீதும் வெறுப்பை கொள்ளாமல் இருப்பது ஏன்???

எத்தனையோ முஸ்லிம்கள் அதை காண்கின்றனர், ஏன் நானும் கண்டுள்ளேன் ஆனால் என் மனதில் அது ஒரு திரைப்படம். அதில் நடிப்பவர்கள் அனைவரும் உண்மையான குற்றவாளிகளா என்ன?? பணத்திற்காக குற்றவாளி வேடம் போட்டுள்ளனர் என்று என் நட்பை மற்றவர்களுடன் சரியான முறையில் பேணி நடந்துள்ள்ளேன்.

ஹிந்து பெயரில் உள்ள ஒரு நடிகன், நடிகை முஸ்லிம் பெயரை கொண்டு நடித்தால் அது ஒரு கற்பனை என்று உணரும் உங்கள் மனது, அவர்கள் படத்தை ரசிக்கும் உங்கள் செயல், வில்லன் வேடத்தில் நடிக்கும் ஒருவர் முஸ்லிம் பெயர் கொண்டு இருந்தால் அதை உண்மையாக நம்புவது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன். (உங்களுக்கு தோணலம் அந்த சின்ன வயசுல  எவ்ளோ அறிவு என்று, மாஷா அல்லாஹ்...)

அதற்கு அவர் சொன்ன பதில், படத்தில் வரும் அனைத்தும் பொய் அல்ல. உண்மையவே கதையாக தயாரிக்கின்றனர் சில கற்பனைகளுடன் என்று.

ஏன் எத்தனை எத்தனை செய்தி தாள்களில் வருகிறது, நிறைய குண்டு வெடிப்பில் முஸ்லிம்களின் பெயரே குறிப்பிடுகின்றனர், இதை எவ்வாறு மறுப்பாய் என்றார்.
உங்களை போல் சிந்திக்கும் மனம் கொண்டவர்கள் உள்ள பட்சத்தில் எந்த பொய் செய்தியும் உண்மையாகவே தெரியும்.

உங்கள் வீட்டு நாய் குட்டி காணாமல் போனா கூட இங்கு வருவது ஒரே ஒரு முஸ்லிம் தான், அது யாஸ்மின், அது தான் கடத்தி கொண்டு போய் இருக்கும் என்று கம்பளைன்ட் பண்ணினால் கூட அதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. காரணம் இன்று முஸ்லிம்களின் நிலைமை சினிமா மற்றும் ஊடகத்துறையால் இவ்வாறே பொய் பிரச்சாரம் கொண்டு சாயம் பூசப் பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் மற்ற எந்த மதத்திலும் இல்லாத அழகிய சட்டங்களும், அணுகுமுறைகளும் இஸ்லாத்தை தவிர வேறு எங்கும் இல்லை.

எந்த ஒரு உயிரையும் அவசியமின்றி கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதில்லை. அப்படி நீங்கள் கூறும் குண்டு வெடிப்பை எல்லாம் செய்தது எல்லாம் ஒரு முஸ்லிம் என்றால் அவர் இஸ்லாத்தை முழுமையாக படித்தவராக இருக்க முடியாது, இல்லையெனில் பசுத்தோல் போர்த்திய புலியாக முஸ்லிம் பெயரை கொண்டு நாடகம் நடத்தும் விஷ கிருமிகளாக இருக்கும் என்று.

ஆனால் அவர் என் மீதும், முஸ்லிம்கள் மீதும் கொண்ட வெறுப்பு, எங்கள் இருவரின் நட்பை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. இதை தவிர்க்கும் வண்ணமாக என் தோழியை என்னை காண வேண்டும் எனில் என் வீட்டிற்கு வா, இங்கு வந்தால் எனக்கும் உன் அப்பாவிற்கும் தேவை இல்லாத மன சங்கடம் என்று அந்த பிரச்சினையை தூர போட முயன்றேன்.


என்னால் இயன்ற இத்தனை விளக்கங்கள் கொடுத்தும் அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரும் இல்லை, மேற்க் கொண்டு புரிய வைக்கும் பக்குவமும் அந்த வயதில் எனக்கும் இல்லையே என்று இப்பொழுதும் வருந்துகிறேன்.

இவர் போன்ற சில மனிதர்களால் உலகம் முழுவதும் இன்று எத்தனை எத்தனை முஸ்லிம்களோ தேவையற்ற அவதூறை சுமந்துக் கொண்டு உலா வருகின்றனர்.இதனால் அவர்கள் மனது எந்த அளவில் பாதிக்கும் என்றும், நாட்டின் சகோதரத்துவம் குலையும் என்பதை மனதில் கொள்ள மறுப்பது ஏன்???


இன்று சினிமாவும், ஊடத்துறையும் நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் அளவில் உள்ள விதத்தில் நல்ல கருத்துகளை, நல்ல விதமாக பதியலாம். யாருக்கும் பங்கம் வராமல். யாருடைய வாழ்வையும் பாதிக்காமல்.

நண்பர்களே!! நான் என் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்.  

சினிமாவிலும், செய்தி ஊடகங்களிலும் வருவதை அப்படியே நம்புவது பகுத்தறிவு பெற்ற நம்மை போன்ற மனிதருக்கு அழகல்ல.

ஒருவரை குற்றம் சாட்டும் முன் உண்மை எது, பொய் எது என்று ஆராய்வது சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நம் கடமை. அது நம் கையிலே உள்ளது.

நீங்கள் ஒருவரை குற்றம் சொல்ல ஒரு விரலை நீட்டினால், உங்கள் விரல்களில் உள்ள மூன்று விரல்கள் உங்களை குறிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.




சகோதரத்துவோம் பேணுவோம், தேவையற்ற காழ்புணர்ச்சியை விடுவோம்... இன்ஷா அல்லாஹ்..


உங்கள் சகோதரி

யாஸ்மின் ரியாஸ்தீன் 



Comments

  1. \அதற்கு அவர் சொன்ன பதில், படத்தில் வரும் அனைத்தும் பொய் அல்ல. உண்மையவே கதையாக தயாரிக்கின்றனர் சில கற்பனைகளுடன் என்று.\

    எத்தனையோ சினிமாக்களில் கோயிலில் வைத்து டூயட் சீன்கள் எடுக்கப்படுகின்றன. அப்ப உண்மையிலேயே அப்படித்தான் செய்கிறார்களா என்று கேட்டால் அப்ப மட்டும் \சில கற்பனைகளுடன் என்று.\ இந்த எஸ்கேப்பிசம் உபயோகிக்கப்படும்.

    \சகோதரத்துவோம் பேணுவோம், தேவையற்ற காழ்புணர்ச்சியை விடுவோம்... \ இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி பானு...

      நியாயமற்ற மனிதர்கள் இரண்டு விதமான முகத்தில் உலா வருகின்றனர்...

      ஒன்று அவர்களுக்காக ஏற்றாற்போல் மற்றொன்று மற்றவர்களை குறை சொல்ல..

      எப்பொழுது மாறுவார்களோ... :(

      Delete
  2. நல்ல பதிவு யாஸ்மின். பெரியவங்களைப் பாத்து காழ்ப்புணர்ச்சியைக் காட்டினாலே வருத்தமாருக்கும்; சின்னப் பிள்ளைகளைப் போய்... என்ன சொல்ல... படத்த படமா மட்டும் பாருங்கன்னு சொன்ன பெரிய மனுசங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய பதிவு!! :-(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்