Posts

மனிதர்கள் நன்றி கெட்டவர்களே!!!

அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... ஆம்! அனேக நேரங்களில் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். இது  யாரும் மறுக்க இயலாத உண்மை. இவ்வுலகில் நாம் எதிர் பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நடப்பதில்லை, ஆனால் எதிர் பார்க்காத, நாம் கேட்காத எத்தனையோ நல்ல விசயங்களும் நம் வாழ்வில் நடை பெறவே செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.. அப்படி நடக்கும் பொழுது நாம் சந்தோஷ மிகுதியிலும், உற்சாகத்திலும் அதை யாரிடம் சொல்வது, எப்படி சந்தோசத்தை இரட்டிப்பாக்குவது என்று சிந்திக்கிறோமே தவிர அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கவே செய்கிறோம். இது அனைவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு தருணங்களிலாவது நடைபெறவே செய்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டியுள்ளது. இதில் சிலர் விதி விலக்காக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ். இவ்வுலகை பரிபாலித்து, நம் தேவையை தகுத்த நேரத்தில் தகுந்த இடத்தில் பூர்த்தி செய்யும் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்கும் நாம்,  நமக்கு தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ, நண்பர்களோ,  நம் அலுவலகத்தில் உள்ளவர்களோ நமக்கு சிறு உதவி செய்தாலும் ...

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

Image
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு.... நம்முடைய ஒவ்வொரு செயலும் எண்ணப்படியே அமைகின்றன.  அது உடனடியாக இருக்கலாம் இல்லையெனில் சற்று காலங்கள் கழித்தும் நடக்கலாம். இதனால் நாம் என்னும் எண்ணங்கள் நல் வழியில் அமைத்துக் கொண்டால் அதன் பலனும் நன்மையாகவே அமையும், இதனால் தீமையை விட்டு விலகி நிற்போம். ஒரு வேளை நாம் எண்ணும் அந்த செயல் நடக்காமல் போய் விட்டால், அதை நினைத்து வருந்தி நம் எதிர்கால சிந்தனையையும், செயல்களையும் வருத்திக் கொள்ளாமல், எது நடந்தாலும் நன்மைக்கே என்ற நேர்மறை எண்ணம் (Positive Thinking) கொள்வது அந்த ஒரு செயல் நடக்காமல் போனாலும், நாம் எதிர்கொள்ளும் மற்ற செயல்களை கவனத்துடன் மேற்க் கொள்ள உதவும், வெற்றிக் கொள்ள உதவும், மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். நாம் ஒன்றை நடக்கும் என்று எண்ணியோ அல்லது ஒன்றை எதிர்பார்த்ததோ நடக்காவிட்டால் அதன் மூலம் வேறு எதோ நன்மை இருக்கிறது என்று நம்புவதே சிறந்த நேர்மறை என்னத்திற்கு அழகு, விரக்தி அடைவதால் கடவுளின் நாட்டம் இன்றி எதையும் ...