இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)
பொதுவாவே
பள்ளி படிக்கும் காலங்களில் பள்ளியில் தினமும் சாம்பார் சாதம் தான் போடுவாங்க
சத்துணவு என்ற பேரில்... சாம்பாருக்காக பயன்படுத்தப்படும் பருப்பு ஒருவித சிவப்பு
கலர்ல இருக்கும்.. ரொம்ப ஈசியா வெந்துடும்.. பேர் மசூர் தால்னு சொல்வாங்க..
செம்ம வாடையா (துர்நாற்றமாக)
இருக்கும். அந்த வாடை சிலருக்கு பிடிக்கும், பலருக்கு பிடிக்காது.
ஆனாலும்
பள்ளிக்கூட சாப்பாட்டையே சாப்பிடும் நிலை உள்ளவர்களுக்கு அதெல்லாம் பெரிய வாடையா
இருக்காது..
இன்னும்
சொல்லப் போனா, சத்துணவு என்று பள்ளிக் கூடங்களில் போடப்படும் பெரும்பாலான உணவு சத்தை விட நோயையே அதிகம்
தருகிறது.. காரணம் புழு பூச்சிகள் நிறைந்த அரிசி, அத சரியா கழுவக் கூட சோம்பேறித்தனம் படும்
சத்துணவு பொறுப்பாளிகள். அந்த சோற வடிச்சு ஒரு சாக்குல கொட்டுவாங்க பாருங்க.. அந்த
சாக்கு சுத்தம் செய்து கழுவாம கூட அது மேலையும், இது மேலையும் சுத்தமற்ற பல இடத்தில் போட்டு
காய விடுவாங்க.. இது அனைத்து பள்ளிகளிலும் அப்படி நடக்கிறதா என்று
தெரியாவிட்டாலும் சில பள்ளிகளில் நடந்தது உறுதி, கண்ணால் கண்டவர்களில் நானும் ஒருவள். அதாவது நான் படித்த பள்ளியில். ஒரு கேள்வி கேக்க முடியாது, கேட்டா சோறு கிடைக்காது.
தென் முட்டை
குட்டி குட்டியா சத்துணவுக்காகவே தயாரிக்கிற முட்டை போல் அவ்ளோ கவிச்சியா
இருக்கும்... ஓடுகள் முழுதாக உரித்தும் உரிக்காமலும் சுத்தமற்ற உப்புத்
தண்ணியிலும் போட்டு அவித்து பல நேரம், ஓட்டோட அந்த தண்ணீரில் இருந்து எடுத்து நேரா
மாணவர்கள் வாங்கும் சோறு தட்டில் போடுவாங்க. பல நேரங்களில் பல பேருக்கு அந்த சாப்பாடு என்றாலே ஒரு வித மன உளைச்சல் தரும். அந்த அளவுக்கு சிலத வார்த்தைகளால் சொல்ல முடியாது. அனுபவித்தவர்களுக்கு புரியும்.
ஆனால் இப்போ
எல்லாம் மாறிவிட்டதாவும், சத்தா, சுகாதராம
சோறு போடுறதாவும் சொல்லிகிறாங்க.. இப்ப படிக்கிற பிள்ளைகளிடம் அல்லது பள்ளியில் நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். நான் படிச்ச காலத்தில் உமட்டிக் கிட்டே இத
சாப்பிடுவோம்.. பசிக்கு வேற வழி இல்லையே.. வீட்டில் இருந்து பள்ளிக் கூடம் இரண்டுக்
கிலோ மீட்டர் அல்லது அதுக்கு மேல நடந்து போகணும். வீட்டில் சமைத்த சுத்தமான பழைய சோறே இருந்தாலும் அத நடந்து
போய் சாப்பிட்டு வரக் கூடிய அளவில் மதிய உணவு இடைவெளி இருக்காது.. எடுத்து வரக்
கூடிய சூழலும் பல நேரங்களில் அமையாது. ஏனா தொடர்ந்து வாங்கலன்னா சத்துணவு
வாங்குபவர்கள் பட்டியலில் இருந்து பேர நீக்கிடுவாங்க. பல காரணங்களினால் சத்துணவு
தான் சாப்பிட்டாகணும் என்பது பலரின் கட்டாய நிலை.
இப்போ என்ன
சொல்ல வர்றேன்னா மேல சொன்ன மசூர் பருப்பு இப்போக் கூட நாங்க பயன்படுத்துகிறோம் துபாயில்.
சீக்கிரம் வெந்துடும், முன்ன போல்
வாடை இல்லை, விலைக்
கம்மின்னு. ஆனால் அதில் இவ்வளவு உடல் நலக்குறைவு ஏற்படுத்தும் நச்சுத்தன்மை உள்ளது
என்பதை அறிந்திருக்கவில்லை.
இந்தப்
பருப்பு தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்னமே தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
காரணம் இந்த பருப்பில் உள்ள பயன்களை விட அதில் உள்ள நிறத்தின் நச்சுத் தன்மையால்
நரம்புக் கோளாறு, முடக்கு வாதம் மற்றும் மூளைக் கோளாறு வருகிறது. நச்சுத் தன்மை கலந்து
உள்ள எந்த பொருளையும் எப்போதாவது எடுத்துக் கொள்வதை விட தொடர்ந்து எடுத்துக்
கொள்ளும் போது பாதிப்பு பெரிதாகவும் குறுகிய காலத்திலும் ஏற்ப்படுகிறது.
அரசாங்க
பள்ளிகளையும், அதில் கிடைக்கும் உணவையும் நம்பி எத்தனையோ மக்கள் தங்கள் குழந்தைகளின்
அடிப்படைக் கல்வி முதலே அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இதனால்
சிறு வயது முதலே அந்த பருப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவைக் குழந்தைகள்
தொடர்ந்து எடுத்து வருவதால் மேற்சொன்ன நோய்களால் குழந்தைகள் பாதிப்படைகிறார்கள் என்று
மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது மட்டும் அல்லாமல் ரேசன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டும் நம்பி வாழும் மக்கள் நம் நாட்டில் ஏராளம்.
இந்த பிரச்சினையின்
காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாரஸ்டிராவில் இந்த பருப்பிறகு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் அங்கும் பள்ளிகளில் இந்த பருப்பினாலான உணவை உண்ட குழந்தைள் பல நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.
ஏற்கனவே
இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்ட ஒரு உணவு பொருள் மற்றொரு மாநிலத்தில்
அங்கீரிக்கப்பட்டுள்ளது அதாவது சில ஆண்டுகள் முன் வரை மஹாரஸ்டிராவில் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாத வேலையில், தடை விதிக்கப்பட்ட அதே மாநிலத்திற்கு
மீண்டும் அந்த பருப்பைக் கொள்முதல் செய்யவும், அதை ரேசன் மற்றும் பள்ளிக்
கூடங்களில் சத்துணவில் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்து அனுமதி அளித்துள்ளது. என்னக்
கொடுமை இது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொது நல வழக்கு ஒரு புறமிருக்க,
வளரும்
குழந்தைகளுக்கும் அதை உண்ணும் நடுத்தர வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
பாதிப்பு என்று தெரிந்த ஒன்றை மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அனுமதித்துள்ளது
என்பது மிகப் பெரிய கேவலமான செயல்.
ஏற்கனவே
தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயலும் பல கார்ப்பரேட் முதலைகளுக்கும் அதற்கு தீனி
போட்டு வளர்த்து விடும் அதிகாரிகளுக்கும் துணை போகும் விதமாக மாநில அரசும் களத்தில்
குதித்து இருப்பது (இது என்ன புதுசான்னு நீங்க கேட்பது புரிகிறது) தமிழகத்தை
இந்திய வரைப்படத்தில் இருந்து முற்றிலும் நீக்க முயற்சிக்கும் இரத்த
காட்டேரிகளுக்கு மனிதர்களை இரையாக்கும் புதுவித மற்றொரு அணுகுமுறை என்று கூறலாம்.
வாழ்வாதாரத்திற்காக
வாங்கும் அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் உணவினை மட்டுமே நம்பி செல்லும் உயிர்களை பலி கொடுக்க முன் வரும் அரசு
அதிகாரிகளும், அரசும் மக்களை எல்லாவற்றிற்கும் பரிசோதனைக்கு பயன்படுத்தும்
மிருகங்களாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல்.
"குறைந்த விலையில் வழங்கப்படும்" என்ற ஒரு சொல்லைக் கொண்டே மக்களே மெல்ல மெல்லக் கொல்லும் விசத்தை வாங்க வைத்து விடலாம் என்ற யுக்தியை கார்பேரேட்காரர்கள் பயன்படுத்துவதை விட அரசு வட்டாரங்கள் மக்களை கவர அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது வேதனையான செயல்.
ஆக்கம்: யாஸ்மின் ரியாஸ்தீன்
Comments
Post a Comment