Posts

குழந்தையின்மை – குற்றம் 23

Image
காலங்காலமாக பெண்களுக்கு உள்ள பல தலையாய பிரச்சினைகளில் குழந்தையின்மையும்  ஒன்று. எத்தனை நவீனமாக உலகம் மாறினாலும் சில பிரச்சினைகள் மட்டும்  நவீனத்துவத்துக்கு ஏற்ப மாறி வருகிறதே தவிர அதற்கு தீர்வு என்ற ஒன்று அமைவதே இல்லை எனலாம். உடலளவில் குழந்தை பெறுவதற்கு கணவன், மனைவி இருவரில் யாருக்கு பிரச்சினை இருந்தாலும் மனைவியை மட்டும் குற்றவாளியாக்குவதும், கொடுஞ்ச்சொற்களை வீசுவதும், உற்றார் உறவினர் “ஒரு குழந்தை பெத்துக்க கூட லாயக்கில்லை என்ற” கொடும் பார்வையால் சுட்டெரிப்பதும், இதையெல்லாம் மீறி ஒரு ஆணுக்கு எத்தனை பெரிய குறைகள் இருந்தாலும் மருத்துவம் என்பது பெண்ணையே சார்ந்துள்ளது. அந்த பெண்ணுக்கே அனைத்து விதமான வலிகளையும் உடலளவிலும் மனதளவிலும் தருகிறது. இது போன்ற சமுதாயத்தின் தண்டனைகளால் தன்னை ஒரு குழந்தைக்கு தாய் தந்தையராக்க அந்த தம்பதியினர் எவ்வித மருத்துவமும் செய்துக் கொள்ள தயாராகின்றனர். மனிதர்களின் பலவீனத்தை அறிந்தே பலவித வியாபாரங்கள் அவர்களை ஆட்டுவிக்கின்றது என்றாலும் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டிய மருத்துவர்களும் மருத்துவமும் வியாபாரம் ஆகி பல காலங்காளாகி போனது வேதனைக்க...

மனிதத்தை உணருங்கள்!!!

Image
இறைவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!!! எந்த தவறும் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதும் காலங்காலமாக சிலரால் சிலர் அனுபவித்து வருவது எங்கெங்கும் நம்மால் காண முடிகிறது. நாம் இந்தியாவில் வாழ்வில் இந்தியாவையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒருவர் எந்த வித குற்றமே செய்யாமல் அவர் தண்டனையா?? அனுபவிக்கிறார் என்றால் ஒன்று அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவோ அல்லது தலித் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றப்படுத்தலாம், அவர்கள் விரும்பியதை உண்பதை தடுக்கலாம் அதற்காக மிருகத்தை விட மோசமாக சித்திரவதை செய்யலாம் என்ற கோட்பாட்டை, வெறியை ஆதிக்க சக்தியினர் என்றென்றும் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். அதை புற்றுநோய் போல் எங்கெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களின் கோட்பாட்டை இவர்களோடு நில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களிடமும், மற்றவர்கள் அறியாத அளவில் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளதும், அதனை சிந்திக்காமல் அதை அவர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் மிகவும் வேதனைக...

கல்வியா (ஆ???)

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஒருவரை பண்படுத்தக் கூடிய கல்வி என்பது இன்று எட்டாக்கனியாக மாறி வருகிறது என்றால் மிகையாகாது. கல்வி என்றாலே மார்க்கட்டுகளில் கிடைக்கக் கூடிய விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று போல் ஆகி வருகிறது. “கல்வி” என்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பை பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவரும் எடுத்தாளும் தலைப்பாக இருக்கிறது, இதை பற்றி அவர்கள் மனதில் தோன்றியதை கட்டுரைகளாக, பட்டிமன்றமாக, குறும்படமாக இயக்கி இந்த சமூகத்தில் உலாவர செய்துள்ளனர். அப்படி செய்தும் ஏன் அது இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை, ஏன் என்று சற்றே சிந்திப்போமாக!!! கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஒரு சான்று.. நபி ஸல் அவர்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை காண விரும்பிய போது, நபி ஸல் அந்த இளைஞர்களுக்கு விதித்த முதல் கட்டளை, ' நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள்.   அறிவிப்பவர்: அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) - ஸஹீஹ் புகாரி...

வீட்ல யாரும் இல்லைங்கோ!!!

Image
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வின்  திருப்பெயரால் ... முன்பெல்லாம் நம்  வீட்ல  நடக்கும்  சில  பல  விசயங்களை  நம்  கூட  படிக்கும், வேலை  பார்க்கும் இடத்தில், ஃபிரண்ட்ஸ்கிட்ட என்று நமக்கு நெருங்கியவர்களிடம் சேர்  பண்ணி  சிரிப்போம், கவலைப்படுவோம்.. இப்போ  டெக்னாலஜி வளர்ந்துட்டதாலயோ என்னவோ  நம்  அருகில் இருக்கும்  தாய், தந்தை, கணவன், பிள்ளைங்ககிட்ட  பேசுவதும், அன்றாடம்  நடக்கும் விசயங்களை  அவர்களிடம் சேர்  பண்ணுவதும் குறைஞ்சு  போய்  ஃபேஸ்புக், டவீட்டர்னு ஸ்டேடஸ் போட்டு தனியாக புலம்புவதை  நம் மக்கள்  ட்ரன்ட்டா வச்சு  இருக்காங்க.. சரி  பொதுவான  விசயங்களை, கருத்துக்களை  பகிர்வதால் ஒன்னும்  பிரச்சினை  வரப் போவது இல்லை. ஆனா நம் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கின்ற, பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவையான,  சொல்லக் கூடாத,  பகிரக் கூடாத  விஷயங்கள்னு சிலவையும் இருக்குல்ல.. சில மனைவிமார்கள்  என்ன  செய்றாங்கன்னு...

செத்தால் எரித்து விடுங்கள்!!!

Image
பெண்ணாக பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரணங்கள் எண்ணற்றவை. இயற்கையாகவே உடலாலும் மனதாலும் பலவீனமானவள் பெண். அதனால் தான் “பெண்ணைக் கண்டால் பேயும் இறங்கும்” என்ற பழமொழியை ஒரு பெண்ணை நோக்கி கூறுகிறார்களோ என்னவோ. இயற்கையாக ஒரு பெண் தன் உடலில் அனுபவிக்கும் வலிகளும் வேதனைகளும் தடுக்க இயலாது எனினினும், மற்றவர்களால் அவள் படும் இன்னல்களை தடுக்க முடியும். அவளுடைய முயற்சி அதில் சிறிதளவு உள்ளது எனினும் பெரு முயற்சியும் பொறுப்பும் அவளை சுற்றி வாழும் மனிதர்கள் கையிலேயே உள்ளது என்றால் மிகையாகாது. ஆம்.. நம்மால் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு கேடும் வந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் ஒவ்வொருவரின் வாழ்வும் சுகமே. அதுவும் பெண்களை ஒரு ஆணுக்கு தேவைப்படும் சுகப்பொருளாக எண்ணுவதை விட்டு இரத்தமும் சதையும் கொண்ட அவளையும் ஒரு உயிராக ஒவ்வொரு ஆணும் என்று கருதுகிறானோ அன்றே இவ்வுலகை பூவுலகம் எனலாம். ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிற்கு ஏற்ப்படும் வலிகளையும் வேதனைகளையும் நான் உணரும் போது அந்த இடத்தில் என்னை வைத்து சித்தரித்தே பல இடங்களில் அழுது, தேம்பி இருக்கின்றேன். அதுவும் அவ...